விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுகவிற்கு சவால் இல்லை என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். 

கேரளா செல்லும் முன் சென்னை விமான நிலையத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில், இரு மாநிலங்களுக்கிடையே உள்ள நதிநீர் திட்டம் குறித்து பேசுவதற்காக கேரளா முதல்வர் பினராயி விஜயனை சந்திக்க உள்ளேன். இரண்டு மாநிலங்களின் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் நலனுக்காக நான் பேச்சுவார்த்தை நடக்கிறது. 

இந்த சந்திப்பில் பரம்பிகுளம்-ஆழியாறு நீர் பங்கீடு குறித்தும், நீராறு, நல்லாறு திட்டத்தை நிறைவேற்றுவது குறித்தும் ஆலோசிக்கப்படும். இதனால், தமிழகம்-கேரளா இடையே உள்ள நீர்ப் பங்கீடு பிரச்சனைகளில் தீர்வு கிடைக்கும் என நம்புகிறேன். இருமாநில விவசாயிகளின் நலன் கருதியை இந்த பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. ஆந்திர முதல்வரோடு பேசியதால் தான் கிருஷ்ணா நதி இன்று திறக்கப்பட உள்ளது. காவிரி வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பின் படி கர்நாடக அரசு செயல்பட வேண்டும் என்றார். 

விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவிற்கு சாவல் இல்லை. இந்த தொகுதிகளில் அதிமுக அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும். கடந்த தடவை மக்களவை தேர்தலின்போது பொய்யான வாக்குறுதிகளை அளித்து திமுக வெற்றி பெற்றது போல இந்த முறை அது எடுபடாது என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.