Asianet News TamilAsianet News Tamil

பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்திற்கு 30 கோடி நிதி..!! முதலமைச்சர் பழனிச்சாமி அடுத்தடுத்த அதிரடி..!!

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்கள் 7-7- 2020 அன்று தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ள www.tnpowerfinance.com என்ற புதிய வலை தளத்தையும் TNPFCS என்ற கைபேசி செயலியையும் துவக்கிவைத்தார்.

tamilnadu cm edapadi palanichamy release fund for women child welfare scheme
Author
Chennai, First Published Jul 8, 2020, 2:07 PM IST

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்கள் 7-7- 2020 அன்று தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ள www.tnpowerfinance.com என்ற புதிய வலை தளத்தையும் TNPFCS என்ற கைபேசி செயலியையும் துவக்கிவைத்தார். தமிழ்நாடு அரசுக்கு முழுவதும் சொந்தமான பொதுத்துறை நிறுவனமாக தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனம் ஒரு வங்கி சாரா நிதி நிறுவனமாக (வைப்பீடு) 1991 ஆம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்களால் துவக்கப்பட்டது. இந்நிறுவனம் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு நிதி உதவி வழங்கி வருகிறது. இந்நிறுவனம் பொதுமக்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் வைப்புகள் மூலம் நிதி திரட்டிவருகிறது. 

tamilnadu cm edapadi palanichamy release fund for women child welfare scheme

மேலும் இந்நிறுவனம் பொது நிதி நிறுவனமாக 10 லட்சத்திற்கும் மேலான  வைப்பீட்டாளர்களுக்கு பொதுத்துறை வங்கிகளைவிட அதிக வட்டியை அளித்து வருகிறது. தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தால் வைப்பீட்டாளர்களின் நலனிற்காக அதன் செயல்பாடுகளை தகவல் தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்தி ஆன்லைன் மூலமாக செயல்படுத்திடும் வகையில் www.tnpowerfinance.com என்ற புதிய வலைதளம் TNPFCS என்ற கைபேசி செயலியும் உருவாக்கப்பட்டுள்ளது. இப்புதிய வலைதளத்தையும் கைபேசி  செயலியையும் தமிழக முதலமைச்சர் அவர்கள் துவக்கி வைத்தார். மேலும் இப்புதிய வலைதளத்தின் மூலம் தமிழக முதலமைச்சர் அவர்கள் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் உள்ள 8000 பயனாளிகளுக்கு 30 கோடி ரூபாய் நிதியை வழங்கினார். 

tamilnadu cm edapadi palanichamy release fund for women child welfare scheme

இப்புதிய வலைதளத்தின் மூலம் வைப்பீட்டாளர்கள் வைப்பீட்டு கணக்கைத் துவக்குதல், புதுப்பித்தல், முடிவடைந்த வைப்பீட்டுத் தொகையை பெறுதல், வைப்பீடு தொகையின் மூலம் கடன் பெறுதல், Nominees பெயர் மாற்றம் செய்தல், வங்கி விவரங்களை புதுப்பித்தல் போன்ற பல்வேறு பணிகளை மேற்கொள்ள முடியும். மேலும் தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் நோய்த்தடுப்பு மற்றும் நிவாரண பணிக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்களிடம் மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் தங்கமணி அவர்கள் 5 கோடி ரூபாய்க்கான காசோலையை வழங்கினார். இந்நிகழ்ச்சியில்  அமைச்சர் தங்கமணி தலைமைச் செயலாளர் சண்முகம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios