Asianet News TamilAsianet News Tamil

ஒரு முறைக்கு பத்து முறை யோசித்து முடிவெடுத்த முதல்வர்..!! மோடியை முந்தி எடப்பாடி அதிரடி..!!

ஆகியவை நியாயவிலை கடைகளில் விலை இன்றி வழங்கப்படும் . கட்டிட தொழிலாளர்கள் உட்பட பதிவு பெற்ற அனைத்து அமைப்புசாரா தொழிலாளர் குடும்பங்களுக்கும் குடும்பம் ஒன்றுக்கு இரண்டாவது முறையாக ஆயிரம் ரூபாய் நிவாரண உதவிகள் வழங்கப்படும்.  

tamilnadu cm edapadi palanichamy  announce to ex-tern curfew in tamilnadu till  30th
Author
Chennai, First Published Apr 13, 2020, 4:46 PM IST

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க வரும் 30 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பதாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதிரடியாக அறிவித்துள்ளார் ,  பிரதமர் மோடி நாளை காலை நாட்டுமக்களுக்கு உரையாற்ற உள்ள நிலையில் முதலமைச்சர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார் . இதுகுறித்து தமிழக அரசு சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையின் முழு விவரம் :-  உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று நோயை கட்டுப்படுத்தும் வகையில் தமிழ்நாட்டில் கடந்த 24 -3 -2020 அன்று முதல் 6 மணி முதல் ,  31 -3 - 2020 வரை ஊரடங்கு உத்தரவு முதலில் பிறப்பிக்கப்பட்டது .  பின்னர் மத்திய அரசு அதை 15 நாட்கள்  நீட்டித்தது ,  அவ்ஊரடங்கு உத்தரவை  தீவிரமாக கடைபிடிக்கப்பட்டு வருவதன் காரணமாக தமிழ்நாட்டில் நோய் தொற்று பெரிய அளவில் பரவாது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது .

tamilnadu cm edapadi palanichamy  announce to ex-tern curfew in tamilnadu till  30th  

இந்நிலையில் தற்போது உள்ள ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பது தொடர்பாகவும் ,  வைரஸ் நோய் தொற்று தொடர்பாக மாநிலங்கள் எடுத்துவரும்  நடவடிக்கைகளையும் மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்கள் காணொலிக் காட்சி மூலமாக 11-4-2020 அன்று கலந்தாய்வு மேற்கொண்டார் . கலந்தாய்வின் போது தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு தடுப்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளும் ,  தமிழ்நாட்டுக்கு போதிய நிதி ஒதுக்க வேண்டும் எனவும் மாண்புமிகு பிரதமர் அவர்களிடம் நான் எடுத்துரைத்தேன் .  மேலும் 30-4 2020 வரை ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க வேண்டும் என்ற ,  என்னுடைய கருத்தினை தெரிவித்தேன் நானும் மற்றும் முதலமைச்சர்களும் வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க வேண்டும் என வலியுறுத்தினோம்   .  மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களின் கலந்தாய்வு கூட்டத்தில் நடவடிக்கைகளின் அடிப்படையிலும் உலக சுகாதார அமைப்பின் கருத்தின்படியும்,  மருத்துவ நிபுணர் குழு மற்றும் பொது சுகாதார வல்லுனர்கள் குழுக்களின் பரிந்துரைகளின் படியும் , 

tamilnadu cm edapadi palanichamy  announce to ex-tern curfew in tamilnadu till  30th

 மாநிலத்தின் ஊரடங்கு தளர்த்தினால் நோய்த்தொற்று அதிகரிக்கக்கூடும் என்பதை கருத்தில் கொண்டு 11-4 -2020 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் படியும் ,  பேரிடர் மேலாண்மை சட்டம் 2005 இன் படியும்,  குற்றவியல் விசாரணை முறை சட்டம் பிரிவு 144 படியும்  30 -4 -2020 வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுகிறது .கொரோனா வைரசை தடுக்கும் நோக்கில் பேரிடர் மேலாண்மை சட்டம் 2005 இன் படி குற்றவியல் விசாரணை நடைமுறைச் சட்டப் பிரிவு 144 படியும் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் அனைத்துக் கட்டுப்பாடுகளும் தொடரும் ,  ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படும் காரணத்தினால் தமிழ்நாட்டில் உள்ள அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ,  மே மாதத்திற்கான அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் அதாவது ஒரு கிலோ சர்க்கரை ,  ஒரு கிலோ துவரம் பருப்பு ,  ஒரு கிலோ சமையல் எண்ணெய் ,  அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு எப்போதும்  வழங்கப்படும் அரிசி ,  ஆகியவை நியாயவிலை கடைகளில் விலை இன்றி வழங்கப்படும். 

tamilnadu cm edapadi palanichamy  announce to ex-tern curfew in tamilnadu till  30th

கட்டிட தொழிலாளர்கள் உட்பட பதிவு பெற்ற அனைத்து அமைப்புசாரா தொழிலாளர் குடும்பங்களுக்கும் குடும்பம் ஒன்றுக்கு இரண்டாவது முறையாக ஆயிரம் ரூபாய் நிவாரண உதவிகள் வழங்கப்படும்.  பிற மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு மே மாதத்திற்கு 15 கிலோ அரிசி ,  ஒரு கிலோ துவரம் பருப்பு ,  ஒரு கிலோ சமையல் எண்ணெய்  விலை இன்றி வழங்கப்படும் .  அதேபோல் பல்வேறு தரப்பினரிடம் இருந்து வந்த கோரிக்கைகளை பரிசீலித்து தமிழ்நாட்டில் காலை 6 மணி முதல் மதியம் ஒரு மணி வரையிலான காலத்தில் (அடுமனை) அதாவது பேக்கரி இயங்க தடை இல்லை என்பதையும் ஏற்கனவே உணவகங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுரையின்படி பேக்கரிகளில் பார்சல் விற்பனை மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என தெளிவு படுத்தப்படுகிறது .  இவ்வாறு முதலமைச்சரின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது .
 

Follow Us:
Download App:
  • android
  • ios