Asianet News TamilAsianet News Tamil

144 ஊரடங்கு உத்தரவு போட்டு வயித்துல பால் வார்த்த எடப்பாடி...!! இமாலய அறிவிப்பு..!!

மக்களாக முன்வந்து தங்களைத் தனிமைப்படுத்தி கொண்டு அரசுக்கு  ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டிருந்த நிலையில் மக்கள் போதிய அளவில் ஒத்துழைப்பு வழங்காததால் .  முதலமைச்சர் இந்த அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளார்,

tamilnadu cm edapadi announce 144 in tamilnadu regarding corona
Author
Chennai, First Published Mar 23, 2020, 4:19 PM IST

சீனா வைரஸை தடுக்கும் நோக்கில் வரும் மார்ச் 31ம் தேதி வரை  144 தடை உத்தரவை பிறப்பித்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்  அவரின் உத்தரவு பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.   வைரஸ் மிக வேகமாக பரவி வரும் நிலையில் தமிழக அரசால் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது .  சீனாவில் தோன்றிய சீனா வைரஸ் இந்தியாவிலும் வேகம் காட்ட தொடங்கி உள்ளது .  இந்நிலையில் அதைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் எடுத்து வருகின்றன இந்நிலையில் நேற்று ( 22 ஆம் தேதி) மக்கள் தாங்களாகவே முன்வந்து ஒரு நாள்  ஊரடங்கு உத்தரவை கடைப்பிடிக்க வேண்டுமென மத்திய மாநில அரசுகள் கோரிக்கை வைத்தன .  ஆனால் மக்கள் பெருமளவில் ஊரடங்கை  பின்பற்றாமல் தான்தோன்றித்தனமாக நடந்து கொண்டனர் . இதனால் மத்திய மாநில அரசுகள் மக்கள் இந்த நோயின் வீரியத்தை இன்னும் புரிந்து கொள்ளாமல் செயல்படுவதாக கூறியதுடன், அரசுகள் எடுக்கும் நடவடிக்கைக்கு  ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தின. 

tamilnadu cm edapadi announce 144 in tamilnadu regarding corona

கடுமையான முறையில் 144 தடை உத்தரவை பிறப்பிக்கவும்  உத்தரவிடப்பட்டுள்ளன.  இந்தியாவில் சீனா வைரசின் தாக்கம்  317 ஆக இருந்த நிலையில்  நேற்று ஒரே நாளில் 100 பேருக்கு கூடுதலாக பரவியுள்ளது . இந்நிலையில்  தமிழகத்திலும் சீனா வைரசின்  எண்ணிக்கை உயர்ந்துள்ளது .  மார்ச் 31ம் தேதி வரை கட்டாய ஊரடங்கு உத்தரவை நடைமுறைப்படுத்த வேண்டும் இல்லாவிட்டால் மருத்துவமனையில் நோய் பாதித்தவர்கள் ஆயிரக்கணக்கில் நிரம்பி வழியக்கூடுமென  நுண்ணுயிரியல் மருத்துவர்கள் சங்கம் மத்திய மாநில அரசுகளுக்கு அறிவுருத்தியிருந்தன.  இந்நிலையில்  நோய் பரவலின்  தீவிரத்தை  உணர்ந்து கொண்ட தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ,  பல்வேறு  அதிரடி உத்தரவுகளை பிறப்பித்தார்.  இதன் ஒரு பகுதியாக வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு வந்துள்ள  சுமார் மூன்றாயிரம் பேரின் இல்லங்களை அடையாளம் கண்டு அவர்களை தனிமைபடுத்தவும் அவர்களை மற்றவருக்கு அடையாளப்படுத்தும் நோக்கில் அவர்களின் வீடுகளில் நோட்டிஸ்  ஒட்டியும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.  

tamilnadu cm edapadi announce 144 in tamilnadu regarding corona

இந்நிலையில் இது குறித்து சட்டமன்றத்தில் அறிவித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ,  சீனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்ட நபர்கள் உள்ள மாவட்டங்களான சென்னை ,  காஞ்சிபுரம் ,  ஈரோடு ,  உட்பட தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் போக்குவரத்து மற்றும் பொதுமக்களின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த மாவட்ட எல்லைகளை மூடுவதாக உத்தரவிட்டார் .   இந்த ஊரடங்கு உத்தரவு நாளை மாலை 6 மணி முதல் ,  வரும்  31-3- 2020 வரை நடைமுறையில் இருக்கும் என்றும் தெரிவித்தார் .  அதேபோல இந்த உத்தரவை தீவிரமாக அமல்படுத்த அனைத்து காவல் ஆணையர் களுக்கும் மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் உத்தரவிட்டார் . 

tamilnadu cm edapadi announce 144 in tamilnadu regarding corona  

அதைத்தொடர்ந்து அத்தியாவசிய மற்றும் அவசர பணிகள் தவிர மற்ற பொதுப் போக்குவரத்து,   தனியார் போக்குவரத்து ,  மகிழுந்துகள் ,  ஆட்டோ ,  டாக்சி ,  போன்றவை இயங்காது .  மாநிலங்களுக்கு இடையே போக்குவரத்து முக்கியமாக தடை செய்யப்படுகிறது எனவும் அறிவித்தார் .  அத்தியாவசியப் பொருட்களுக்கான பால் காய்கறி மளிகை இறைச்சி மீன் கடைகள் போன்றவை தவிர அனைத்து கடைகளும் வணிக வளாகங்களும் பணிமனைகளும் இயங்காது என்றார் .  அத்தியாவசிய துறைகள் மற்றும் அலுவலக பணிகள் தவிர மற்ற அரசு அலுவலகங்கள் செயல்படாது என்றார் . அதேபோல் மருத்துவம் சார்ந்த பணிகளை மேற்கொள்ளும் தனியார் நிறுவனங்கள் ,  மற்றும் மருத்துவமனைகள் தொடர்ந்து இயங்கும் என்றார் .  இந்நிலையில் அத்தியாவசிய கட்டடப் பணிகள் தவிர பிற பணிகளுக்குதடைவிதிக்கப்படுகிறது .

tamilnadu cm edapadi announce 144 in tamilnadu regarding corona 

எனினும் இந்த நாட்களில் வேலைக்கு வராத தொழிலாளர்களுக்கு சம்பளம் நிறுத்தம் செய்யக் கூடாது என்றார்.   வீடுகளில் இல்லாமல் விடுதிகள் மற்றும் பிற இடங்களில் தங்கியிருக்கும் பல்லாயிரக் கணக்கான பணியாளர்களின் நலன் கருதி அவர்களுக்கு பார்சல் மூலம் மட்டும் உணவு வழங்கும் வகையில் உணவகங்கள் திறந்திருக்க அனுமதிக்கப்படும் .  அம்மா உணவகங்கள் தொடர்ந்து செயல்படும் என அறிவித்தார் .  மக்களாக முன்வந்து தங்களைத் தனிமைப்படுத்தி கொண்டு அரசுக்கு  ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டிருந்த நிலையில் மக்கள் போதிய அளவில் ஒத்துழைப்பு வழங்காததால் .  முதலமைச்சர் இந்த அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளார், முதலமைச்சரின் இந்த அதிரடி நடவடிக்கை சீன வைரஸ் பீதியில் நிம்மது இழந்து தவித்து வரும் பல லட்டக்கணக்கான மக்களின் வயற்றில் பால் வார்த்துள்ளது...

 

 

Follow Us:
Download App:
  • android
  • ios