ஏழு தமிழர்களின் விடுதலை குறித்து தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றிய நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் நன்றி தெரிவித்துள்ளர்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு தொடர்பாக ஆயுள் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நளினி, பேரறிவாளன், உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யும் முடிவை தமிழக அரசே எடுக்க அதிகாரம் உள்ளது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. 

இந்த நிலையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம், விடுமுறை நாளான இன்று தலைமை செயலகத்தில் கூடியது. கூட்டத்தில் தமிழக அமைச்சர்கள் பலர் கலந்து கொண்டனர். 

இரண்டு மணி நேரமாக நடைபெற்ற இந்த அமைச்சரவைக் கூட்டத்தித்துக்கு பிறகு ஜெயக்குமார், 7 பேரையும் விடுதலை செய்ய அமைச்சரவைக் கூட்டத்தில முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசின் வரலாற்று சிறப்பு மிக்க இந்த தீர்மானமாக இது அமைந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து அமைச்சரவைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 7 பேரின் விடுதலை குறித்த தீர்மானம் தற்போது ஆளுநருக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்-ன் செயலாளர் ராஜகோபால் டெல்லி விரைந்துள்ளார். 7 பேரின் விடுதலை குறித்து டெல்லியில் ஆலோசனையில் ஈடுபட உள்ளதாக தெரிகிறது. 

தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் சந்தித்தார். அப்போது 7 பேரின் விடுதலை குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது பற்றி அற்புதம்மாள் நன்றி தெரிவித்தார்.

ஏழு தமிழர்களின் விடுதலை குறித்து தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றிய நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் நன்றி தெரிவித்துள்ளர்.