நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவு தருமாறு பிரதமர் மோடியிடம் முதல்வர் பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார். 

மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக இடம் பிடித்தது. அக்கட்சி 5 தொகுதிகளில் போட்டியிட்டது. அந்தத் தேர்தலில் அதிமுகவோடு சேர்ந்து பாஜகவும் தோல்வியடைந்தது. என்றாலும் பாஜகவுடன் அதிமுக தலைமை நெருக்கமாகவே இருந்து வருகிறது. ஆனால், அதிமுகவில் இருக்கும் முக்கிய தலைவர்கள் பாஜகவுடனான கூட்டணியே வைத்ததே தோல்விக்குக் காரணம் என்றும் கூறிவந்தனர். அதன் அடிப்படையில்தான் வேலூர் நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தில் பாஜகவை அதிமுக ஒதுக்கி வைத்தது.

இந்நிலையில், விக்கிரவாண்டி, நாங்கநேரி தொகுதிக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 21-ம் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்தலில், காங்கிரஸை எதிர்த்து போட்டியிட பாஜக விரும்பியதாக தகவல் வெளியானது. ஆனால், 2 தொகுதியில் அதிமுக போட்டியிடும் என அதிமுக தலைமை அறிவித்தது. இந்த தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் அதிமுக தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக கூட்டணியில் உள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த், பாமக நிறுவனர் ராமதாஸ், உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் அவர்களின் வீடுகளுக்கே சென்று சந்தித்து அதிமுக அமைச்சர்கள் ஆதரவு கோரி உள்ளனர். 

ஆனால், பாஜக தலைவர்களை சந்தித்து அவர்கள் இதுவரை ஆதரவு கேட்கவில்லை என்பதால் தலைவர்கள் அதிருப்தியில் இருந்து வந்தனர். இந்நிலையில், நாங்குநேரியில் பாஜக சார்பில் போட்டியிட வேட்புமனு படிவங்களை வாங்கி சென்றதாக தகவல் வெளியானது. வேட்புமனு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள் என்பதால், பாஜகவும் நாங்குநேரியில் களமிறங்க முடிவு செய்துவிட்டதாக தகவல் வெளியானதால் அதிமுக தலைமை அதிர்ச்சியடைந்தது.

இதையும் படிங்க:- தயவு செய்து இடைத்தேர்தல் தொகுதி பக்கம் வந்துடாதீங்க... பாஜகவிடம் உருண்டு புரண்டு கதறும் அதிமுக...!

இந்நிலையில், ஐஐடி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தமிழக வந்த பிரதமர் மோடியிடம் இடைத்தேர்தலில் பாஜக ஆதரவு தருமாறு முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வம் நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தாக தகவல் வெளியாகியுள்ளது.