முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலம் முன்னேற்றம் அடைய வேண்டும் என தமிழ்நாடு கண் பார்வையற்றோர் சங்கத்தினர் அப்பல்லோ மருத்துவமனை வெளியே பிரார்த்தனை செய்தனர்.
கடந்த செப்டம்பர் மாதம் 22ம் தேதி முதல் முதலமைச்சர் ஜெயலலிதா உடல் நலக்குறைவால் சென்னை ஆயிரம் விளக்கு, கிரீம்ஸ் ரோட்டில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு லண்டன் டாக்டர் ரிச்சர்டு ஜான் பீலே, சிங்கப்பூர் பிசியோதெரபி நிபுணர்களும் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு லண்டன் டாக்டர், பிசியோதெரபி நிபுணர்கள் குழுவினர் அளித்து வரும் தீவிர சிகிச்சையால் தற்போது அவர் நலமுடன் இருப்பதாகவும், நன்றாக பேசி வருவதாகவும் கூறப்படுகிறது., இதே நிலை தொடர்ந்தால் அவர் ஒரிரு நாட்களுக்குள் பூரண குணமடைவார் என மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

இதற்கிடையில் அதிமுக அமைச்சர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் என தமிழகம் முழுவதும் ஏராளமானோர் பல்வேறு கோயில்களில் பூஜை, பரிகாரம், யாகம், அலகுகுத்துதல், தேர் இழுத்தல் உள்பட பலவிதமாக பிரார்த்தனைகள் செய்து வருகின்றனர். அதில் சர்வ மதத்தினரும், தங்களது பிரார்த்தனைகளை செய்து வருகின்றனர்.
முதலமைச்சர் ஜெயலலிதா பூரண உடல்நலம் பெற அ.தி.மு.க. தொண்டர்கள் அப்பல்லோ மருத்துவமன முன்பு தினமும் பல்வேறு விதமான பிரார்த்தனைகள், பூஜைகள், அன்னதானம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், தமிழ்நாடு கண் பார்வையற்றோர் சங்கம் சார்பில் முதலமைச்சர் ஜெயலலிதா பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என பிரார்த்தனை நடைபெற்றது. இதேபோல் அ.தி.மு.க. மகளிரணி சார்பில் சஷ்டி பூஜையும் நடந்தது.
முதல்–அமைச்சர் ஜெயலலிதா பூரண நலமுடன் திரும்ப வேண்டி நடிகர் குண்டுகல்யாணம் அணிந்து இருந்த சட்டையில் நூதன வாசகங்கள் இடம் பெற்று இருந்தது. அதில் ‘சீக்கிரம் வாங்க... உடல்நலமுடன் வாங்க... சிங்கம்போல் வாங்க... எங்கள் தங்கமே வாங்க...’ என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
