டாஸ்மாக்கில் அதிக வருமானம்! இது 'குடி' அரசின் வெட்கக்கேடான செயல் - தமிழக அரசை வெளுத்து வாங்கும் பாஜக
மது விற்பனையில் வருவாய் ஈட்டியதற்காக கரூர் மாவட்ட நிர்வாகம் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்திய திருநாட்டின் சுதந்திர தின விழா மற்றும் குடியரசு தின விழா நாட்களில் தமிழகம் முழுவதும் மாவட்ட நிர்வாகம் சார்பாக மாநில வளர்ச்சிக்காக பல்வேறு அரசு துறையில் அயராது பணியாற்றும் ஊழியர்களுக்கு அந்தந்த மாவட்ட நிர்வாகம் சார்பாக பாராட்டு தெரிவிப்பது வழக்கமாக உள்ளது.
இந்திய நாட்டின் 74வது குடியரசு தின விழாவை முன்னிட்டு கரூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்ற குடியரசு தின விழா நிகழ்ச்சியில் வருவாய்த்துறை, காவல்துறை, ஊரக வளர்ச்சித்துறை உட்பட பல்வேறு துறைகள் சார்பாக சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகளுக்கும், ஊழியர்களுக்கும் கேடயமும், பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட்டது.
இதையும் படிங்க..Adani: 1.45 லட்சம் கோடி போச்சு.! பணக்காரர் பட்டியலில் பின்னடைவு - அடுத்த விஜய் மல்லையாவாக மாறுகிறாரா அதானி?
இதில் மது விற்பனையில் வருவாய் ஈட்டியதற்காக கரூர் மாவட்ட நிர்வாகம் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த நிலையில் இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி.
அவர் வெளியிட்டுள்ள பதிவில், குடியரசு தினத்தன்று டாஸ்மாக்கில் அதிக சரக்கு விற்று வருமான ஈட்டியதற்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி கரூர் மாவட்ட நிர்வாகம் கொண்டாடியிருப்பது 'குடி' அரசின் வெட்கக்கேடான செயல். இந்தியாவிலேயே அதிக இளம் விதவைகள் உருவானதற்கு காரணமான மதுவை விற்க அரசு ஊழியரை ஊக்குவிக்கும் செயலை அம்மாவட்ட நிர்வாகம் செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க..கேரளாவில் ஓகே.! தமிழ்நாட்டில் கைதா? பாஜகவுக்கு ஆதரவு கொடுக்கும் திமுக - ஓங்கி அடிக்கும் சீமான்