சென்னையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கிய மருத்துவர் கொரான தொற்று ஏற்பட்டு உயிரிழந்தார் ,  இந்நிலையில் அவரது உடலை அடக்கம் செய்ய சுடுகாட்டை ஒட்டி உள்ள பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர் ,  இதனால் இது கைகலப்பாக மாறி பதற்றத்தை ஏற்படுத்தியது , பின்னர் போலீஸ் பாதுகாப்புடன் மருத்துவரின் உடல் அடக்கம் செய்யப்பட்டது . இந்நிலையில்  தமிழக பாஜக மாநில தலைவர் எல். முருகன் தற்போது சென்னையில் நடந்துள்ளது செய்தி அதிர்ச்சி அளிக்கிறது என குறி அறிக்கை ஒன்று  வெளியிட்டுள்ளார் அதன் முழு விவரம் :-  கொரோனா தொற்றால் பாதிப்பு ஏற்பட்டு உயிரிழந்த இரண்டு டாக்டர்களின் உடலை அடக்கம் செய்வதற்கு சென்னையை சேர்ந்த அந்தந்த பகுதி மக்கள் அடுத்தடுத்து எதிர்ப்பு தெரிவித்து ஆட்சேபணை செய்த செய்திகள் அதிர்ச்சியையும் வேதனையையும் தருகிறது. 

கொரோனா பரவலின் காரணமாக ஊரடங்கு நிலவி வரும் காலத்தில் பொதுமக்கள்  நாம் வீட்டிலிருந்து வெளியே செல்ல வேண்டாம் என பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருக்கிறோம் .  இந்த நிலையில் தொற்று ஏற்படும் ஆபத்து  இருக்கிறது என்பதை உணர்ந்தும் உயிரை பணையம் வைத்து நமக்காக பொதுவெளியில் தொண்டாற்றி வருகிறார்கள் டாக்டர்கள்...  செவிலியர்கள் ,  காவல்துறை ஊழியர்கள் ,  மற்றும் சுகாதாரத்துறை ஊழியர்கள் ,  இவர்களைத்தான் மாண்புமிகு பாரதப் பிரதமர் மோடி அவர்கள் கொரோனா வீரர்கள் எனக் கூறியுள்ளார் .  இவர்களுக்கு ஆதரவு தெரிவித்து நாம் ஒன்றுகூடி கைத்தட்டி மகிழ்ச்சி தெரிவித்து இருக்கிறோம் ,  கடந்த ஏப்ரல் 14 கூட நாட்டு மக்களுக்காக தனது உரையில் இவர்களை நாம் மிகவும் மதிக்க வேண்டும் என பிரதமர் குறிப்பிட்டிருக்கிறார் . கொரோனாவுக்கு எதிராக யுத்தம் உலகப் போருக்கு எதிரான யுத்தம் .  இந்தப் போரில் உயிர் துறக்கும் வீரர்கள் பாதுகாப்பு படை வீரர்களுக்கு சமமானவர்கள் .  அவர்களை கௌரவிக்கும் பொருப்பு சமுதாயத்தை சேர்ந்தது . 

இந்நிலையில் அம்பத்தூரில் நெல்லூர் டாக்டர் லட்சுமி நரசிம்மனை புதைக்க ஏற்பட்ட எதிர்ப்பும் ,  நேற்று கீழ்ப்பாக்கத்தில் டாக்டர் சைமன் அடக்கம் செய்ய எழுந்த எதிர்ப்பும் அதிர்ச்சியும் வேதனையும் தருகிறது . கொரோனா இல்லை என்ற போதும் நீலகிரியில் டாக்டர் ஜெயமோகனின் அடக்கத்திற்கு எதிர்ப்பு உருவானது இதுபோன்ற எதிர்ப்பு தெரிவிப்பவர்களை அரசு அதிகாரிகள் பக்குவமாகவும் ,  மீறினால் அதிகாரத்தைப் பயன்படுத்தியும் சரிசெய்யவேண்டும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொண்டால் மட்டுமே இதுபோன்ற ஆட்சேபனைகள் இனி ஏறாமல் பார்த்துக் கொள்ள முடியும் .  மறைந்த கொரோனா வீரரின் இறுதி மரியாதை கௌரவமாக நடத்தப்பட வேண்டும் .இந்த விஷயத்தில் பொதுமக்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து நடந்துகொள்ள வேண்டும்  என இருகரம் கூப்பி வேண்டுகோள் விடுக்கிறேன் . 

 

இதுபோன்ற சூழ்நிலையில் பாஜக தொண்டர்கள்  நாமும் தாமாக முன்வந்து அரசு அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் இனி யாரேனும் கொரோனாவால்  உயிரிழக்க நேரிட்டால் உடனடியாக முன்வந்து பாஜக செய்து வரும் எத்தனையோ சேவை பணிகளில் இதுவும் ஒரு முக்கிய பணி என்பதை கருத்தில் கொண்டு சேவை செய்ய வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன் .  மறைந்த மூன்று மருத்துவர்களுக்கு பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் எனது அஞ்சலியை தெரிவித்துக் கொள்கிறேன் அவர்தம் குடும்பத்தினருக்கு பாரதிய ஜனதா கட்சி தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது என பாஜக மாநில தலைவர் எல், முருகன் தெரிவித்துள்ளார் .