Asianet News Tamil

தமிழில் உரையை ஆரம்பித்த ஆளுநர்... 16வது சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது...!

எளிமையான வாழ்க்கை வாழுங்கள், இது ஊழலை அகற்றிவிடும், இது என செய்தி என சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தமிழில் அறிவுறுத்தினார். அதன் பின்னர் தமிழ் இனிமையான மொழி, வணக்கம் எனக்கூறி தன்னுடைய உரையை தொடங்கினார். 
 

tamilnadu assembly starts today with governor speech
Author
Chennai, First Published Jun 21, 2021, 10:51 AM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு கலைவாணர் அரங்கத்தில் ஆளுநர் உரையுடன் தொடங்கியது. . தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற பிறகு முதல் சட்டப்பேரவை கூட்டம் இன்று நடைபெறுகிறது. ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சட்டசபை செயலாளர் சீனிவாசன் மற்றும் சபாநாயகர் அப்பாவு ஆகியோர் மரபுப்படி சட்டசபைக்குள் அழைத்து வர வந்தனர். அவர் தனது உரையை ஆங்கிலத்தில் நிகழ்த்த, அதைத்தொடர்ந்து ஆளுநரின் ஆங்கில உரையை சபாநாயகர் தமிழில் வாசித்தார். எளிமையான வாழ்க்கை வாழுங்கள், இது ஊழலை அகற்றிவிடும், இது என செய்தி என சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தமிழில் அறிவுறுத்தினார். அதன் பின்னர் தமிழ் இனிமையான மொழி, வணக்கம் எனக்கூறி தன்னுடைய உரையை தொடங்கினார். 

 
அரசின் ஒவ்வொரு செயலும் சமூக நீதி, ஆண் - பெண் சமத்துவம் அனைவருக்குமான பொருளாதார நீதியை அடிப்படையாக கொண்டிருக்கும் என்றும், தனக்கு வாக்களித்தோர், வாக்களிக்காதோர் என்ற எவ்வித பாரபட்சமும் இன்றி அனைத்து மக்களுக்குமான அரசாக திமுக அரசு செயல்படும் என்றும் ஆளுநர் தெரிவித்தார். 

முன்னாள் முதல்வர் கருணாநிதியால் தொடங்கப்பட்ட உழவர் சந்தைகள் தமிழகம் முழுவதும் மீண்டும் அமைக்கப்படும். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு தேவைப்படும் உதவிகளுக்கு, பல்வேறு கோரிக்கைகளாக பிரதமரிடம் முதல்வர் முன்வைத்திருக்கிறார் என்றார். உறவுக்கு கைகொடுப்போம், உரிமைக்கு குரல் கொடுப்போம் என்ற கொள்கைக்கு ஏற்ப மத்திய அரசுடன் நல்லுறவு பேணுவோம் என்றும், அதே சமயத்தில் மாநிலங்களுக்கு சுயாட்சி என்ற இலக்கை எட்ட அரசு உறுதியாக உள்ளதாகவும் ஆளுநர் உரையில் குறிப்பிடப்பட்டிருந்தது. 

தமிழை இந்திய அலுவல் மொழியாக்க தமிழக அரசு தொடர்ந்தும் வலியுறுத்தும், தமிழகத்தில் தடுப்பூசி போடும் மக்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது என்றும், தமிழகத்திற்கு மத்திய அரசு ஒதுக்கும் தடுப்பூசிகளின் எண்ணிக்கையை உயர்த்திட வேண்டும் என்றும் கூறினார். 

ஆளுனர் உரைக்கு பின்னர் சபாநாயகர் அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வுக் கூட்டம் நடைபெற உள்ளது. அதில் இந்த சட்டசபை கூட்டத்தொடர் எத்தனை நாட்களுக்கு நடத்துவது என்பது குறித்து முடிவு செய்யப்படும். முன்னதாக சட்டசபைக்கு வரும் அனைத்து எம்எல்ஏக்கள் மற்றும் அலுவலர்கள் ஊழியர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனைக்குப் பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர். அதேபோல நோய் தொற்று காலம் என்பதால் சட்டசபையில் சமூக இடைவெளியுடன் இருக்கைகள் போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  

தமிழ்நாட்டின் நிதி நிலையில் தற்போதைய நிலையை விளக்கும் வெள்ளை அறிக்கையை ஜூலை மாதத்தில் வெளியிடப்படும் இதன் மூலம் தமிழ்நாட்டு மக்களுக்கு மாநில நிதி நிலையில் விவரங்கள் முழுமையாக தெரிவிக்கப்படும். சென்னை கன்னியாகுமரி தொழில் பெருவழிகளும் சென்னை பெங்களூரு தொழில் வேறு வழியிலும் அமைந்துள்ள தொழில் வளர்ச்சி குறைவாக உள்ள வட மாவட்டங்களில் அதிக வேலைவாய்ப்புகளை ஏற்படுத்த கூடிய தொழில் நிறுவனங்களை தொடங்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழ்நாடு அரசு எடுக்கும் என்றார். 

கொரோனா பெருந்தொற்றின்  தீவிரம் குறைந்தவுடன் உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும், மதுரை,திருச்சிராப்பள்ளி,சேலம் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் பெருந்திறள் விரைவு போக்குவரத்து அமைப்புக்கான சாத்தியக்கூறு ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என்றார். தமிழ்நாட்டில் உள்ள ஒன்றிய அரசு அலுவலங்களிலும் பொதுத்துறை நிறுவனங்களிலும் தமிழ்நாட்டை சேர்ந்தவர்களுக்கு பணிநியமனத்தில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று ஒன்றிய அரசிடம் தமிழ்நாடு அரசு வலியுறுத்தும் எனக்கூறினார். 

`தமிழகத்தில் நீட் தேர்வால் மாணவர்கள் பாதிப்படையாமல் இருக்க தேவையான சட்டங்கள் நிறைவேற்றப்படும். நீட் தேர்வு பாதிப்புகளை ஆராய அமைக்கப்பட்டுள்ள குழுவின் பரிந்துரையை பெற்று சட்ட முன்வடிவு உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும். நீட் தேர்வு ரத்து செய்ய சட்ட முன்வடிவை கொண்டுவந்து ஜனாதிபதியின் ஒப்புதலை பெறுவோம் எனத் தெரிவித்தார். 

Follow Us:
Download App:
  • android
  • ios