Asianet News TamilAsianet News Tamil

தமிழகத்தில் விரைவில் உறுதியாக தேர்தல் நடைபெறும்….அடித்துக் கூறும் மு.க.ஸ்டாலின்…

tamilnadu assembly election wil be held very soon
tamilnadu assembly election wil be held very soon
Author
First Published Jun 6, 2017, 9:33 PM IST


தமிழகத்தில் விரைவில் உறுதியாக தேர்தல் நடைபெறும்….அடித்துக் கூறும் மு.க.ஸ்டாலின்…

தமிழகத்தில் வெட்கக்கேடான ஆட்சி நடைபெற்று வருவதாகவும், விரைவில் உறுதியாக தேர்தல் வரும் என்றும் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

ஈரோட்டில் கொங்கு தேசிய மக்கள் கட்சியின் மாநாடு நடைபெற்றது. அதில் சிறப்பு விருந்தினர் பங்கேற்றுப் பேசிய ஸ்டாலின், ஜெயலலிதா மரணம் குறித்து  விசாரணை நடத்தினால் பல அ.தி.மு.க.வினர் சிறை செல்லவேண்டி வரும் என்று தெரிவித்தார்.

 தமிழகத்தில் நடப்பது வெட்க கேடான ஆட்சி என்று, . அ.தி.மு.க.வில் நாளுக்கு நாள் புதிய அணிகள் உருவாகி கொண்டிருக்கின்றன எனவும் அவர் கூறினார்.

ஒரு வாக்குப் பதிவில் 3 முதலமைச்சர்கள ஆட்சி நடத்தியது தமிழகத்தில் மட்டுமே என்று ஸ்டாலின் தெரிவித்தார்.

எடப்பாடி மட்டும் தினகரன்  இடையே  தற்போது நடைபெற்று வரும் பனிப்போர் உச்சத்தை அடைந்துள்ளதால் ஆட்சியை கவிழ்க்க முன்வரமாட்டார்கள் என்றும் தமிழகத்தில் விரைவில் பொது தேர்தல் நடப்பது உறுதி என்றும் தெரிவித்தார்.

பாண்டியாறு-புன்னம்புழா நதிகள் இணைப்பு உள்பட பல்வேறு திட்டங்கள் கிடப்பில் உள்ளன என்றும்,  நதிகள் இணைப்புக்கு ஆதரவு பெருகினாலும் மத்திய அரசு அக்கறை காட்டுவதில்லை என்றும் ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.

தற்போது மத்தியில் ஆளும் பாஜக அரசு தங்களது குறைகளை மறைக்கவே புதிய, புதிய அறிவிப்புகளை வெளியிடுகிறது என தெரிவித்தார்.

அமைச்சர் விஜய பாஸ்கர் உள்ளிட்டோர் வீடுகளில் வருமான வரித் துறையினர் சோதனை நடைபெற்றது. ஆனால் இதுவரை இது குறித்து மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன் என்றும்ம கேள்வி எழுப்பினார்.

Follow Us:
Download App:
  • android
  • ios