2021ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழகர் கட்சி தனித்து போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.

திலீபன் 33ஆம் ஆண்டு நினைவுநாளில் கலந்து கொண்ட சீமான் பின்னர் செய்தியாளர்ககளுக்கு பேட்டியளிக்கையில்;- வருகிற தமிழக சட்டப்பேரவை தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும். திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ் கட்சிகளுடன் எந்த காலத்திலும் கூட்டணி வைத்து கொள்ள மாட்டோம். 

சட்டப்பேரவை தேர்தலுக்காக தமிழகத்தின் பிரதான கட்சிகளான திமுக, அதிமுக கட்சிகள் தேர்தல் பணிகளை துரிதப்படுத்தியுள்ளது. அந்த வரிசையில் நீண்ட நாட்களாக ஆட்சி மாற்றத்தை வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியும் தேர்தல் பணியில் களமிறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.