முதல்ல டிக் டாக் ஸ்டாப் பண்ணுங்க... முதல் வரவேற்பு தெரிவித்த தமிழிசை...! 

டிக் டாக் செயலியை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என ததகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன் தெரிவித்தார். இது குறித்து கருது தெரிவித்த தமிழக பாஜக தலைவர் தமிழிசை, டிக் டாக் செயலியை தடை செய்தால் அதை முதல் நபராக நான் வரவேற்பேன் என கூறியுள்ளார். 

டிக் டாக் செயலி தற்போது இன்றைய இளைஞர்கள் மத்தியில் பெரும் சவாலாக உள்ளது. இந்த செயலி பயன்படுத்தும் ஒவ்வொருவரும் தங்களை ஒரு கதாநாயகன் கதாநாயகி என நினைத்து கொள்ளும் அளவிற்கு புகுந்து விளையாடுகிறாரக்ள். இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, எல்லை மீறிய காட்சிகளையும் பதிவு செய்து வருகின்றனர்.

அரசியல் தலைவர்கள் முதற்கொண்டு காமெடி நடிகர்கள் வரை  அனைவரையும் கிண்டல் செய்யும் விதமாக அமைந்துள்ளது டிக் டாக். இந்த நிலையில், டிக் டாக் செயலியை தமிழகத்தில் தடை செய்ய வேண்டும் என சட்டப்பேரவையில் மனித நேய ஜனநாயக கட்சி உறுப்பினர் தமிமூன் அன்சாரி கோரிக்கை வைத்தார்.

இதற்கு பதில் அளித்து பேசிய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ப்ளூ வேல் விளையாட்டு எப்படி மத்திய அரசு தலையிட்டு தடை செய்ததோ அதேபோல் டிக் டாக் ஆப் தடை செய்யவும் அரசு நடவடிக்கை எடுக்கும் என்றார். மேலும் இந்த டிக் டாக் செயலியின் சர்வர் ரஷ்ய நாட்டில் செயல்படுவதால் மத்திய அரசிடம் இது தடை செய்வது குறித்து வலியுறுத்தப்படும் என்று தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன் தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து, டிக் டாக் செயலியை தடை செய்தால் அதை முதல் நபராக நான் வரவேற்பேன் என தமிழிசை கூறியுள்ளார். எங்களை போன்றவர்களை தி டாக் செயலியில் கிண்டல் செய்கிறார்கள் என சென்னை தி.நகரில் பாஜக தமிழக தலைவர் தமிழிசை கருத்து தெரிவித்து உள்ளார்.