பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்த தமிழக பாஜக தலைவர் தமிழிசை,

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

"இது அனைவருக்கும் மகிழ்ச்சி தரக்கூடிய பட்ஜெட்" என்று தெரிவித்தார்.

மேலும் வருமானவரி உச்சவரம்பில் மாற்றமில்லை என்பதும் வருமானவரி குறைப்பு செய்திருப்பதும் நாட்டில் அதிகமுள்ள இந்தியர்களுக்கு பயனளிக்கும் என்று தமிழசை தெரிவித்தார்.

இந்திய நாட்டில் இந்தியர்கள் அதிகம் உள்ளனர் என்ற தமிழிசையின் புதிய கண்டுபிடிப்பால் செய்தியாளர்கள் சற்று குழம்பித்தான் போனார்கள்

பிறகு தான் தெரிந்தது தமிழிசை டங் ஸ்லிப்பாகி அவ்வாறு கூறியிருக்கிறார் என்று...

தொடர்ந்து இது ஏழை மக்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய பட்ஜெட் என்று புகழாரம் சூட்டினார்

அடிப்படை கட்டமைப்பு மற்றும் விவசாயம், கல்விக்கு மிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருப்பதால் கிராமங்கள்கள் மேம்பாடு அடையும் என்றார்.

இந்த பட்ஜெட்டை தமிழக பாஜக வரவேற்பதாகவும் ரயில்வே பட்ஜெட்டில் தமிழகம் எந்த விதத்திலும் புறக்கணிக்கப்படவில்லை என்றும்

ரயில்வே பட்ஜெட் குறித்து அமைச்சர் சுரேஷ் பிரபு தங்களுக்கு ஏற்கனவே தெரிவித்திருந்ததாகவும் தமிழிசை கூறினார்.