- Home
- Tamil Nadu News
- அனைத்து பேருந்துகளிலும் மகளிருக்கு இலவச பயணம்: முதல்வர் பிறந்த நாளில் வெளியாகும் ஜாக்பாட் அறிவிப்பு?
அனைத்து பேருந்துகளிலும் மகளிருக்கு இலவச பயணம்: முதல்வர் பிறந்த நாளில் வெளியாகும் ஜாக்பாட் அறிவிப்பு?
Free Bus Scheme for Women | தமிழகத்தில் அனைத்து அரசுப் பேருந்துகளிலும் மகளிருக்கு இலவசப் பயணம் வழங்கும் திட்டம் தொடர்பாக முதல்வர் ஜோசப் விஜய் இன்று துறை அமைச்சர், அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.

மகளில் இலவசப் பேருந்து
தமிழகம் முழுவதும் தற்போது அரசு நகரப் பேருந்துகளில் மகளிருக்கு இலவசப் பேருந்து சேவை வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டம் கடந்த திமுக அரசால், அரசு பதவியேற்ற முதல் நாளிலேயே அமல்படுத்தப்பட்ட திட்டமாகும். இத்திட்டத்திற்கு தமிழகம் முழுவதும் மகளிர் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
இந்த நிலையில் முதலமைச்சரும், தவெக தலைவருமான விஜய் தேர்தலுக்கு முன்பாக இத்திட்டத்தின் விரிவாக்கமாக தமிழகம் முழுவதும் அனைத்து அரசுப் பேருந்துகளிலும் மகளிர் இலவசமாக பயணிக்கும் திட்டம் அமல்படுத்தப்படுமென அறிவிப்பை வெளியிட்டார். மேலும் சட்டமன்ற தேர்தலில் தவெக வெற்றி பெற்று ஆட்சி அமைத்ததைத் தொடர்ந்து இத்திட்டம் செயல்பாட்டுக்கு வருவது தொடர்பாக மக்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.
முதல்வர் தீவிர ஆலோசனை
இதனிடையே இத்திட்டம் தொடர்பாக முதல்வர் விஜய் இன்று போக்குவரத்துத்துறை அமைச்சர், அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், “போக்குவரத்துத் துறயின் தொலைநோக்கு திட்டங்களான மகளிர் மாநிலம் முழுவதும் கட்டணமில்லா பயணம் செய்வது தொடர்பான செயல் திட்டம் குறித்தும், சுற்றுச்சூழலுக்கு உகந்த மின்சாரப் பேருந்துகளைப் பெருமளவில் பயன்பாட்டிற்கு கொண்டு வருவது குறித்தும், போக்குவரத்து தொழிலாளர்களின் நலன் மற்றும் அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது குறித்தும் முதல்வரால் அறிவுறுத்தப்பட்டதாக” தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் பிறந்த நாளில் ஜாக்பாட் அறிவிப்பு..?
இதனிடையே முதல்வர் விஜய்யின் பிறந்த நாள் விழா வரக்கூடிய 22ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. தமிழகத்தின் முதல்வராக விஜய் முதல் முறையாக இந்தப் பிறந்தநாளைக் கொண்டாட உள்ளதால் அதனை மிகவும் சிறப்பாகக் கொண்டாட கட்சி நிர்வாகிகள் திட்டமிட்டு வருகின்றனர். இந்த நிலையில் முதல்வரின் பிறந்த நாளை ஒட்டி இலவசப் பேருந்து சேவை தொடர்பான அறிவிப்பு வெளியாகலாம் என சொல்லப்படுகிறது.

