tamilisai speech in chennai
தமிழகத்தில் விநாயகர் சிலைகளை இந்த வழியாக கொண்ட செல்லக்கூடாது, அந்த வழியாக கொண்டு செல்லக் கூடாது என்று சொல்லும் துணிச்சல் இங்கு யாருக்கு இருக்கிறது ? என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்திரராஜன் சவால் விடுத்தார்.
சென்னையில் மதுவுக்கு எதிராக பாஜக சார்பில் ஊர்வலம் நடைபெற்றது. இதில் பங்கேற்றுப் பேசிய தமிழிசை, தமிழகத்தில் பாஜகவை இனி யாரும் கிள்ளுக் கீரையாக நினைத்துவிடக்கூடாது என தெரிவித்தார்.
ஒவ்வொரு தேர்தலிலும் இங்கு தாமரை மலர்ந்து வருவதாக தெரிவித்த தமிழிசை, விரைவில் தமிழகத்தில் பாஜக ஆட்சி அதிகாரத்தை பிடிக்கும் என தெரிவித்தார்.
தமிழகத்தில் விநாயகர் சிலைகளை எந்த தெருக்களின் வழியாக எடுத்துச் செல்ல வேண்டும் என்பதை பாஜக தான் முடிவு செய்யும் என்றும், இந்த தெரு வழியாக எடுத்துச் செல்லக் கூடாது, அந்த தெரு வழியாக எடுத்துச் செல்லக் கூடாது என சொல்லும் துணிச்சல் யாருக்கும் வரும் என கேள்வி எழுப்பினார்.
தமிழகத்தில் விரைவில் ஒரு மாற்றத்தை பாஜக கொண்டு வரும் எனவும் தமிழிசை சௌந்திரராஜன் தெரிவித்தார்.
