டிடிவி.தினகரன் கட்சி கொஞ்சம் கொஞ்சமாக உதிர்ந்து கொண்டு வருகிறது என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விமர்சனம் செய்துள்ளார். 

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளார்களுக்கு பேட்டியளித்த தமிழிசை, காவிரியில் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என கர்நாடாக முதல்வர் குமாரசாமி கூறுவது ஆரோக்கியமானது தான் என்றும், பதவி பறிபோய்விடுமோ என்தால் கூறுகிறாரா என்று தெரியவில்லை எனவும் கூறினார்.

  

பாஜக குறித்து நமது எம்.ஜி.ஆர் நாளிதழில் வெளியாகியுள்ள கருத்து குறித்து கேட்ட கேள்விக்கு பதிலளித்தார், எம்.ஜி.ஆர். நாளேட்டில் இடம் பெறுவதற்கு எல்லாம் பதில் கூற விரும்பவில்லை. அவர்கள் கட்சி இருக்கிறதா என்பதை முதலில் பார்க்க வேண்டும். தினகரன் கட்சி கொஞ்சம் கொஞ்சமாக உதிர்ந்து போய் கொண்டிருக்கிறது என்று விமர்சனம் செய்தார். 

மேலும், காவிரி நதி நீர் ஆணையத்தின் படி யாராக இருந்தாலும் காவிரி நதிநீர் ஆணையத்தின் கட்டளைப்படி தண்ணீர் திறந்துவிட்டுதான் ஆக வேண்டும். இதில், எந்தவித அரசியலும் தலையிடக்கூடாது. தமிழக விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய நீரை பெற்றுதர கூட்டணி கட்சிகளும் வழிவகை செய்ய வேண்டும் என்று குறிப்பிட்ட அவர், காவிரி விவகாரத்தில் கூட்டணி கட்சி என்று வரும் போது ஸ்டாலின் வாய் திறப்பதே இல்லை என குற்றம்சாட்டினார்.