Asianet News TamilAsianet News Tamil

மாரிதாஸ் விவகாரம்: உங்களுக்கு முதுகெலும்பே கிடையாது... திமுகவை செமயாக கலாய்த்த தமிழிசை!

 சமூக ஊடகங்களில் #Isupportmaridhas என்ற ஹாஷ்டேக்கை பாஜகவினர் பயன்படுத்தி கருத்துகளைப் பதிவிட்டுவருகிறார்கள். பதிலுக்கு  திமுகவினர் #mendalmaridhas என்ற ஹாஷ்டேக்கை உருவாக்கி விமர்சித்துவருகின்றனர். இந்நிலையில் மாரிதாஸ் மீது புகார் கொடுத்த திமுகவை  தமிழக பாஜக தலைவர் தமிழிசை விமர்சித்துள்ளார்.
 

Tamilisai slams dmk on maridhas issue
Author
Chennai, First Published Aug 28, 2019, 6:14 AM IST

முதுகெலும்பு இருக்கிறது எனப் பெருமை பேசும் திமுக, முதுகெலும்பு இல்லாததை நிரூபித்து இருக்கிறது என்று பாஜக மாநில தலைவர் தமிழிசை விமர்சித்துள்ளார்.Tamilisai slams dmk on maridhas issue
காஷ்மீரில் 370வது சட்டப்பிரிவு நீக்கப்பட்ட விஷயத்தில் மத்திய அரசுக்கு திமுக கடும் எதிர்ப்பு தெரிவித்தது. வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ள காஷ்மீர் தலைவர்களை விடுதலை செய்யக் கோரியும் காஷ்மீர் விவகாரத்தில் பாஜக அணுகுமுறையைக் குறை கூறியும் டெல்லியில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் 14 கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றனர். Tamilisai slams dmk on maridhas issue
காஷ்மீர் விவகாரத்தில் திமுகவின் அணுகுமுறையையும் கட்சித் தலைவர் ஸ்டாலினையும் பாஜக ஆதரவாளரான மாரிதாஸ் காணொலி காட்சிகளை வெளியிட்டு விமர்சனம் செய்தார். மேலும் தொடர்ச்சியாக திமுகவைப் பற்றி காணெலி காட்சிகளை சமூக ஊடகங்களில் வெளியிட்டுவருவதாகவும் கூறப்படுகிறது. திமுகவை தடை செய்ய வேண்டும் என்றும், 370ம் சட்டப்பிரிவு நீக்கப்பட்டதால் திமுகவின் நிலைப்பாடு ஹிஸ்புதின், லஷ்கர் இ தொய்பா ஆகிய தீவிரவாத இயக்கங்களுக்கு ஆதரவாக இருப்பதாகவும் மாரிதாஸ் விமர்சனம் செய்ததாகக் கூறப்படுகிறது.

 Tamilisai slams dmk on maridhas issue
அவருடைய காணொலி காட்சிகளை பாஜகவினர் பலரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்துவருகிறார்கள். இந்நிலையில் திமுக தலைமை நிலைய செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான ஆர். எஸ். பாரதி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில், ‘மாரிதாஸ் என்பவர் சமூகவலைத்தளங்களில் திமுகவைப் பற்றி அவதூறு பரப்புகிறார். அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று ஆர்.எஸ். பாரதி தெரிவித்திருந்தார். 
மாரிதாஸ் மீது புகார் அளித்ததை பாஜக  தேசிய செயலாளர் ஹெச். ராஜா ஏற்கனவே கண்டித்திருந்த நிலையில், சமூக ஊடகங்களில் #Isupportmaridhas என்ற ஹாஷ்டேக்கை பாஜகவினர் பயன்படுத்தி கருத்துகளைப் பதிவிட்டுவருகிறார்கள். Tamilisai slams dmk on maridhas issue

பதிலுக்கு  திமுகவினர் #mendalmaridhas என்ற ஹாஷ்டேக்கை உருவாக்கி விமர்சித்துவருகின்றனர். இந்நிலையில் மாரிதாஸ் மீது புகார் கொடுத்த திமுகவை  தமிழக பாஜக தலைவர் தமிழிசை விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக, தமிழிசை தனது ட்விட்டர் பக்கத்தில், “திமுகவுக்கு ஆதரவு குரல் என்றால், அது கருத்து சுதந்திரம். வலிமையான குரலால் திமுகவுக்கு வலி ஏற்படுத்தினால், 'கருத்து சுதந்திரத்தின் கழுத்து நெறிக்கப்படுகிறது' எனப், புகார் அளிக்கிறது. முதுகெலும்பு இருக்கிறது எனப் பெருமை பேசும் திமுக, முதுகெலும்பு இல்லாததை நிரூபித்து இருக்கிறது.” என்று தெரிவித்துள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios