கஜா புயலால் பாதிக்கப்பட்டு, வீடிழந்து தவித்து வரும் மக்களின் துயரத்தை நேரில் பார்வையிட்டு அவர்களுக்கு ஆறுதல் கூறி, தேவையான உதவிகளை செய்து வருகிறார் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவந்தரராஜன்.

உண்மையான நண்பனை கஷ்டத்தில் தெரிந்துக்கொள்ளலாம் என்பார்கள்.... அதெல்லாம் விட, இதுவரை எந்த ஒரு ஊழல் குற்றச்சாட்டோ...மற்ற கட்சியினரை தரக்குறைவாக பேசியோ...பழக்கம் இல்லாத தமிழிசை அவர்களை எதிர்கட்சியினர் மட்டுமின்றி.....பெரும்பாலோனோர் அவரின் உருவத்தை கூட கிண்டல் செய்தும்,  மீம்ஸ் வெளியிட்டும், நடு இரவில் போன் செய்து திட்டுவதுமாக....அரசியல் காழ்புணர்ச்சியை சொல்லி மாளாது.....

ஆனால் இன்று கஜா புயலால் பெரிதும் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, வீடு வீடா சென்று தெரு தெருவாய் மக்களை சந்தித்து அவர்களுக்கு தேவையான் நிவாரண பொருட்களை  வழங்குவது மட்டுமின்றி, அவர்களின் உடல்நிலையை சோதித்து மருந்து மாத்திரைகளையும் வழங்கி வருகிறார் தமிழிசை....

மனதால் பெரிதும் பாதிப்பான மக்களுக்கு ஆறுதல் கூறி, அவர்களுடனே தங்கி அவர்களுடன் ஆறுதலாக பேசி மற்ற பிற உதவிகளையும் செய்து வருகிறார் தமிழிசை .... 

இவரின் இந்த செயல், சமூக வலைத்தளங்களில் கலாய்க்கும் நெட்டிசன்களை தலை குனிய வைத்து உள்ளது. தான் எதையும் செய்ய முன்வரவில்லை என்றாலும், வெட்டியாக மற்றவர்களை பற்றி சமூக வலைத்தளத்தில் "கலாய்க்கும்" என்ற பெயரில் மனம் புண்படும்படி நடந்துக்கொள்ளும் சமூகம் இருக்க தான் செய்கிறது.

வாயிலேயே வடை சுடும் மற்றவர்கள் மத்தியில் களத்தில் இறங்கி, ஒரு தலைவராய், ஒரு பெண்ணாய், ஒரு  மருத்துவராய், ஒரு தாயாய் தீயாய் வேலை செய்து வருகிறார் தமிழிசை..... 

ரூ. 20 லட்சம் மதிப்புள்ள மருந்துகளை சேகரித்து ஒரு நடமாடும் ஆம்புலன்ஸ் மூலம் 10 டாக்டர்களை கொண்ட மருத்துவ குழுவுடன் களத்தில் இறங்கி இருக்கிறார் தமிழிசை 

கடந்த 3 நாட்களாக அங்கேயே முகாமிட்டு மருத்துவ பணியில் ஈடுபட்டுள்ளார். உட்புற கிராமங்களுக்கும், நிவாரண முகாம்களுக்கும் சென்று மருத்துவ பரிசோதனை செய்து மருந்து மாத்திரைகள் வழங்கி வருகிறார் தமிழிசை...

எழுத்து சொல்வதைவிட...புகைப்படம் சொல்லும் மற்றவற்றை.....