வேலூர் தோல்வி குறித்து ஏ.சி.சண்முகம் கூறிய கருத்துக்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

தேர்தலுக்கு முன்பாக நாடாளுமன்றத்தில் என்.ஐ.ஏ. சட்டமும், முத்தலாக் சட்டமும் நிறைவேற்றப்பட்டது. பின்னர் காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யும் சட்ட விவகாரம் எழுந்தது. இதனால் நான் தோற்க பாஜகவே காரணம் என ஏ.சி.சண்முகம் குற்றம்சாட்டி இருந்தார். 

இதற்கு பதிலளித்துள்ள பாஜக தமிழக தலைவர் தமிழிசை, ‘காஷ்மீர் விவகாரத்தில் பிரதமரும், அமித்ஷாவும் துணிச்சலான முடிவு எடுத்து இருப்பதாக நடிகர் ரஜினிகாந்த் கூறி இருக்கிறார். அது வரவேற்புக்குரியது. முத்தலாக், காஷ்மீர் தனி அந்தஸ்து ரத்து போன்ற சட்டங்களால்தான் வேலூரில் தோற்றேன் என்று ஏ.சி.சண்முகம் கூறி இருக்கிறார். இது தவறு. இது போன்ற அறிவிப்புகள் அவருக்கு அதிக வாக்குகளை பெற்றுத் தந்திருக்கிறது.

முஸ்லிம் மக்கள் முத்தலாக் சட்டத்தை எதிர்க்கவில்லை. அரசியல் கட்சிகள்தான் எதிர்க்கிறார்கள். இஸ்லாமிய மக்கள் ஆதரித்து இருக்கிறார்கள். அதனால்தான் ஏ.சி.சண்முகம் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றுள்ளார்’’ என அவர் தெரிவித்துள்ளார்.