Asianet News TamilAsianet News Tamil

விக்கிபீடியாவில் “டுமிழிசை” ஆன “தமிழிசை”..! பாஜகவினர் கொந்தளிப்பு..!

tamilisai name changed in wikipedia
tamilisai name changed in wikipedia
Author
First Published Oct 23, 2017, 4:26 PM IST


தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனின் பெயர் விக்கிபீடியாவில் டுமிழிசை என மாற்றப்பட்டுள்ள சம்பவம் பாஜகவினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் பாஜக மீதான வெறுப்பலைகளை பாஜக வெறுப்பாளர்கள் சமூக வலைதளங்களில் வெளிப்படுத்திவருகின்றனர். 

நீட் தேர்வு, இந்தி திணிப்பு உள்ளிட்ட பல விவகாரங்களில் தமிழக அரசியல் கட்சிகள், பாஜகவை எதிர்த்து அரசியல் செய்துவருகின்றன. பொதுமக்கள் மத்தியிலும் சில விவகாரங்களில் பாஜக மீது அதிருப்தி நிலவுகிறது. அந்த அதிருப்திகளை சிலர் தகாத முறைகளில் வெளிப்படுத்துகின்றனர்.

விஜய் நடித்து வெளியாகியுள்ள மெர்சல் திரைப்படத்தில் ஜிஎஸ்டி வரிவிதிப்பு குறித்து தவறாக பதிவு செய்யப்பட்டுள்ள வசனங்களை நீக்க வேண்டும் என மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், மாநிலங்களவை எம்.பி இல.கணேசன், பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா ஆகிய தலைவர்கள் வலியுறுத்தினர். 

இந்த விவகாரத்தில் அரசியல் கட்சித் தலைவர்கள், திரைத்துறையினர், சினிமா ரசிகர்கள் என ஒட்டுமொத்த எதிர்ப்புக்கும் பாஜக தலைவர்கள் ஆளாகினர்.

இந்நிலையில், மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனி பெயரை விக்கிபீடியாவின் ஆங்கில பக்கத்தில் பொரி உருண்டை என மர்ம நபர்கள் மாற்றி பதிவிட்டிருந்தனர். பின்னர் சில நிமிடங்களில் பெயர் மாற்றி பதிவிடப்பட்டது.

அதேபோல தமிழிசை சவுந்தரராஜனின் பெயரை தமிழ் விக்கிபீடியாவில் டுமிழிசை சவுந்தரராஜன் என மாற்றி மர்ம நபர்கள் பதிவிட்டுள்ளனர். இதுவும் சில நிமிடங்களில் மீண்டும் திருத்தம் செய்யப்பட்டது.

தமிழக பாஜக தலைவர்கள் மீது சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் தொடுக்கும் தாக்குதல்களால் பாஜகவினர் கொந்தளித்துள்ளனர்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios