மு.க.ஸ்டாலின் கருத்து குறித்த விமர்சனத்திற்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை ஒட்டப்பிடாரத்தில் அமர்ந்து கடுமையாக தாக்கி பதிலடி கொடுத்தார். அதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெறிந்த நபர்கள் மூலமாக தொடர்ந்து பாஜகவுடன் பேச முயற்சித்து வருவதாக கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்தார். மேலும் தெலுங்கனா முதல்வர் சந்திரசேகர ராவ் சந்திப்பே பாஜக ஏற்பாடு என்ற தமிழிசை மறைமுக பேச்சுக்கு திமுகவினர் கொந்தளித்து போயியுள்ளனர். 

தமிழிசையின் இந்த பேட்டியை அருகில் இருந்து பார்த்துக்கொண்டிருந்த அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் அதிர்ச்சியனதைவிட திமுகவினர் தான் அதிகமாக ஆடிபோயியுள்ளனர். தமிழிசையின் பேட்டியை டி.வி.யில் பார்த்துக்கொண்டிருந்த திமுகவினர் உடனடியாக பதிலடி கொடுத்துள்ளனர்.

 

தமிழிசையின் இந்த பேச்சு ஒரு லூஸ் டாக் என திமுக மாநிலங்களவை எம்.பி. மற்றும் அக்கட்சியின் சட்டத்துறை செயலாளருமான ஆர்.எஸ்.பாரதி தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த தொலைபேசி பேட்டியில் தமிழிசையை காட்டமாக சாடியுள்ளார். திமுக, அதிமுக மோதல் போய் திமுக பாஜக மோதலாக மாறியுள்ளது.