அதிமுக எம்பி ராஜினாமா செய்ததை போல் திமுக எம்பியான கனிமொழியும் ராஜினாமா செய்ய வேண்டும் அதேபோல காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை  அண்ணன் ஸ்டாலின் என தமிழிசை வம்பிழுத்திருக்கிறார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழகத்தில் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்தும் மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும் அதிமுக ராஜ்யசபா எம்பியான முத்துக்கருப்பன் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

ஆனால் அவரது ராஜினாமா கடிதத்தை ராஜ்யசபா தலைவரான வெங்கையா நாயுடு கடிதத்தில் பிழை இருப்பதாக கூறி அந்தக் கடிதத்தை நிராகரித்துள்ளார்.

இந்நிலையில் திருவண்ணாமலையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை  எதிர்மறை அரசியல் செய்வதை ஸ்டாலின் கைவிட வேண்டும் என தமிழிசை வலியுறுத்தினார். தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்குலைவிற்கு திமுக தான் காரணம் என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

காலையில் கைதுசெய்து மாலையில் விடுதலை செய்வதால் தான், திமுகவினர் தினமும் போராடுகின்றனர். காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்கும். அவ்வாறு அமைக்கும் வரை கைது செய்தாலும் போராட்டம் தொடரும் என்று கூறும் அண்ணன் ஸ்டாலின் போன்ற தலைவர்கள் சிறையிலேயே இருக்கட்டும் என்றார்.

10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த திமுக காவிரி பிரச்சனையில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார். மேலும், அதிமுக எம்பி முத்துக்கருப்பனைப் போல் திமுக எம்பியான கனிமொழியும் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.