வாழ்நாள் சாதனையாளர் விருது பெற இருக்கும் நடிகர் ரஜினிகாந்தை தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் வாழ்த்தியுள்ளார்.
கோவாவில் 50வது சர்வதேச திரைப்பட விழா வரும் 20 ம் தேதியில் இருந்து 28 ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்திற்கு வாழ்நாள் சாதனையாளர் விருது மற்றும் சிறப்பு நட்சத்திர விருது வழங்கப்பட இருப்பதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இன்று காலை அறிவித்தார். இதையடுத்து தனக்கு விருது வழங்குவதாக அறிவித்த மத்திய அரசுக்கு ரஜினிகாந்த் ட்விட்டரில் நன்றி தெரிவித்தார்.
1975ம் ஆண்டில் இயக்குநர் கே.பாலச்சந்தர் இயக்கிய 'அபூர்வ ராகங்கள்' படத்தின் மூலம் அறிமுகமாகிய ரஜினிகாந்த், 44 ஆண்டுகளில், தமிழ், தெலுங்கு, கன்னடம், உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 167 திரைப் படங்களில் நடித்துள்ளார். அவருக்கு தற்போது மத்திய அரசின் விருது அறிவிக்கப்பட்டிருப்பதால் திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் வாழ்த்தி தெரிவித்து வருகின்றனர்.
அபூர்வ ராகங்கள் தொடங்கி பேட்ட வரை சாதித்ததை வாழ்த்தி வாழ்நாள் சாதனையாளர் விருது. படையப்பா இன்னும் பல சாதனைகளை படையப்பா என வாழ்த்துகிறேன்
— Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiGuv) November 2, 2019
இதனிடையே நடிகர் ரஜினிகாந்திற்கு தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தராஜன் வாழ்த்து தெரிவித்திருக்கிறார். படையப்பா இன்னும் பல சாதனைகள் படையப்பா என்று வாழ்த்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் ட்விட்டர் பதிவில், "அபூர்வ ராகங்கள் தொடங்கி பேட்ட வரை சாதித்ததை வாழ்த்தி வாழ்நாள் சாதனையாளர் விருது. படையப்பா இன்னும் பல சாதனைகளை படையப்பா என வாழ்த்துகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
Read Exclusive COVID-19 Coronavirus News updates, at Asianet News Tamil.
மெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Nov 2, 2019, 4:11 PM IST