tamilisai atarted to tweet against dmk
நீட் தேர்வு, தமிழக அரசியல் குழப்ப நிலை என பல்வேறு விவகாரங்களில் திமுக.,வும், அதன் செயல் தலைவர் மு.க.ஸ்டாலினும் மத்திய பாஜக., அரசையும் மாநில பாஜக.,வையும் தொடர்ந்து குற்றம் சுமத்திப் பேசி வரும் நிலையில், அவருக்கு பதிலடி கொடுக்கும் விதமாகவும், திமுக., வுக்கு எதிராகவும் பாஜக., இப்போது மேடைகளில் முழங்கத் தொடங்கியுள்ளது.
திருச்சியில் திமுக.வினர் நீட் தேர்வு எதிர்ப்புக் கூட்டம் நடத்திய மறு நாளே அதே இடத்தில் பாஜக., கூட்டம் போட்டு நீட் தேர்வு குறித்தும் திமுக.,வினரின் முரண்பாடுகள் குறித்தும் பேசினார் தமிழிசை. இந்நிலையில் சமூக வலைத்தளமான டிவிட்டர் பதிவுகளில் திமுக.,வினருக்கு பகிரங்கக் கேள்விகளை எழுப்பும் விதமாக பதிவுகளை இட்டு வருகின்றார்.
இன்று அவர் போட்ட டிவிட்டர் பதிவு:
காவிரி பிரச்சனையில் திமுக வின் கடந்த கால துரோக வரலாறை மறக்கமுடியுமா? pic.twitter.com/zb1cvMfapi
— Tamilisai Soundrajan (@drtamilisaibjp) September 20, 2017
காவிரி பிரச்சனையில் திமுக வின் கடந்த கால துரோக வரலாறை மறக்கமுடியுமா? என்ற தலைப்பிட்டு ஒரு டிவிட் பதிவு செய்துள்ளார். அதில், காவிரி பிரச்னையில் மத்திய பாஜக அரசை குறை சொல்லும் ஸ்டாலின், மத்தியில் 18 ஆண்டுகள் தமிழகத்தில் 25 ஆண்டுகளுக்கு மேலும் ஆட்சி அதிகாரத்தில் இருந்த திமுக., காவிரி பிரச்னையை ஏன் தீர்க்கவில்லை.
சர்க்காரியா கமிஷன் பூச்சி மருந்து ஊழல் வழக்கில் தப்பிக்க வேண்டி அன்றைய பிரதமர் இந்திரா காந்தியின் கட்டளைக்கு பணிந்து காவிரி வழக்கை வாபஸ் வாங்கியது அன்றைய திமுக., முதல்வர் கலைஞர் நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை அரசு இதழில் 7 ஆண்டு காலம் தாமதம் ஆனபோது அமைதியாக இருந்த திமுக ஆட்சி. இன்று நடுவர் மன்ற தீர்ப்பை அமல்படுத்த ஆகும் தாமதத்தை குறைக்கூறும் திமுக இறுதித் தீர்ப்பில் உள்ள 12க்கும் அதிகமான சந்தேகங்கள் மற்றும் குழப்பங்கள் விடைகாண முடியாத கேள்விகள் என பலதரப்பு விவாதங்களை கர்நாடக அரசு எழுப்பி உள்ள நிலையில் கூட்டாட்சி தத்துவத்தின்படி முறையான விவாதம் நடத்தி தீர்ப்பை சட்டமாக்கி செயல்படுத்துவது தானே ஜனநாயக நடைமுறை ஆக முடியும். இதை மறந்து மத்திய அரசை தினமும் குறை சொல்லும் திமுக செயல் தலைவர் அறிக்கை திமுக.,வின் கடந்த கால காவிரி துரோகமே இன்றைய நடைமுறை சிக்கலுக்கு காரணம் என்பதே உண்மை. - என்று தமிழிசை தனது டிவிட்டர் பதிவில் கூறியுள்ளார்.
மேலும், திமுக.,வுக்கு அவர் எழுப்பிய சில கேள்விகள்....
நவோதயா பள்ளிகளை எதிர்ப்பது ஒருபுறம்! இந்தி பள்ளிகளை நடத்துவது மறுபுறம்! தி.மு.க.வினரின் முகத்திரையை கிழிப்போம்!
திமுக கிராமத்து ஏழைகளுக்கு தாழ்த்தப்பட்டவர்களுக்கு தரமான இலவச கல்வி தரும் நவோநயாபள்ளிகளைஎதிர்ப்பார்கள் சிபிஎஸ்சி மெட்ரிக்பள்ளி நடத்துவார்கள்
இலங்கைத் தமிழர்களை கொன்று குவிக்க துணைநின்ற சோனியா காங்கிரசை தேடிச் சென்று சுயாட்சிக்கு துணை தேடும் திருமா! எங்கே போனது இலங்கைத் தமிழர் மீதான பாசம்?
வழக்கமாக பேசுவது மாநில சுயாட்சி வழக்கு நடத்த மட்டும் வடநாட்டு வழக்கறிஞர் ! தமிழா! தமிழா! வாய்தா வாங்கத்தான் நம்ம ஊர்வக்கீல்? வக்கற்றவர்களா நாம்?
இலங்கை அரசுக்கு மத்திய அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் - ஸ்டாலின்; ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோது ஈழத் தமிழரின் போர்க்குரலை தடுக்காத திமுக பொய்க் குரல்
ஸ்டாலின் எதிர்மறை அரசியல் செய்கிறார்
வாரிசு அரசியல் குடும்ப ஆட்சி இதுதானே திமுக திக பாமக பேசும் சமூக நீதி?? மக்களை ஏமாற்ற??
"நீட் தேர்வு" - நம்ப வைத்து கழுத்தறுத்த மத்தியரசு. ஸ்டாலின்... இலங்கை இறுதிப் போரில் போர் நின்று விடும் என நம்ப வைத்து சரண் அடையச் செய்தது திமுக ஆட்சி
திமுக ஆட்சியில் ஸ்டாலின் தனியார் ஆங்கிலப் பள்ளி கட்டினீர், பொறியியல், மருத்துவக் கல்லூரி கட்டினீர், தண்ணீருக்காக அணைகள் கட்டினீரா?
