பாஜகவில் இணைந்த தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவரின் மாஜி மனைவி..!
தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான வேல்முருகனின் முன்னாள் மனைவி காயத்திரி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.
தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான வேல்முருகனின் முன்னாள் மனைவி காயத்திரி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.
தமிழகத்தில் முக்கிய அரசியல்கட்சிகளில் ஒன்றாக திகழ்வது தமிழக வாழ்வுரிமை கட்சி. இந்த கட்சியின் தலைவர் வேல்முருகன் பண்ருட்டி தொகுதியின் எம்.எல்.ஏ.வாக பொறுப்பு வகித்து வருகிறார். திமுக கூட்டணியில் தற்போது அங்கம் வகித்து வருகிறது.
இந்தசூழலில், தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவரான வேல்முருகன் முன்னாள் மனைவி காயத்ரி பாஜகவில் இணைந்தார். சென்னையில் பாஜக தலைமை அலுவலகமான காமலாயத்தில் அக்கட்சியின் தலைவர் அண்ணாமலை முன்னிலையில் அவர் பாஜகவில் இணைந்தார். தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகனின் முன்னாள் மனைவி காயத்ரி பாஜகவில் இணைந்திருப்பது தமிழக வாழ்வுரிமை கட்சியினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேல்முருகன் இவரை விவாகரத்து செய்து 4 வருடங்கள் ஆகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.