Asianet News TamilAsianet News Tamil

பதவி நலனுக்காக வாய் மூடி வேடிக்கை.!இரட்டை நிலைப்பாட்டில் காங்கிரஸ் தலைவர்கள்.?கிழித்து தொங்க விட்ட ஜி.கே.வாசன்

முன்னாள் பாரதப் பிரதமரின் கொடூரக் கொலை செயலில் ஈடுப்பட்ட பேரறிவாளின் விடுதலையில் உறுதியான, உணர்வுபூர்வமான நிலையை எடுக்காமல், ஒருபுறம் ஒப்புக்கு போராட்டம் என்றும் மறுபுறம் பேரறிவாளின் விடுதலையை பாராட்டும்; கொண்டாடும் கூட்டணி கட்சிகளுடன் தொடர்ந்து கூட்டணி வைத்திருப்பது காங்கிரசின்  இரட்டை நிலைப்பாட்டையையே எடுத்துக்காட்டுகிறது என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் குற்றமசாட்டியுள்ளார்.
 

Tamil State Congress leader GK Vasan has accused the Congress of taking a double stand on the release of Perarivalan
Author
Tamilnadu, First Published May 20, 2022, 10:24 AM IST

பேரறிவாளன் விடுதலை- காங் போராட்டம்

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பேரறிவாளன் 31 ஆண்டு சிறைவாசத்திற்கு பிறகு நேற்று முன்தினம் உச்சநீதிமன்றம் விடுவித்தது. இதனை திமுக உள்ளிட்ட பலைவறு அரசியல் கட்சிகள், அரசியல் அமைப்புகள் கொண்டாடி வருகிறது. அதை நேரத்தில் காங்கிரஸ் கட்சி பேரறிவாளன் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டது. பேரறிவாளன் விடுதலையை கொண்டாடும் திமுகவோடு கூட்டணி வைத்துள்ளதற்கு கண்டனம் தெரிவித்து தரும்புரி காங்கிரஸ் மாவட்ட தலைவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளானர். இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாட்டை கண்டிக்கும் வகையில், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 

Tamil State Congress leader GK Vasan has accused the Congress of taking a double stand on the release of Perarivalan

17 பேர் மரணம்- அரசு உணர்ந்து செயல்பட வேண்டும்

அதில், பேரறிவாளனின் விடுதலை சம்பந்தமாக உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு பல்வேறு காரணங்களைக் கொண்டு சட்டத்தின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் அந்த வழக்கில் சம்பந்தப்பட 7 பேரும் நிரபராதிகள் இல்லை என்பது, ஏற்கனவே  நடந்த விசாரனையின் அடிப்படையில் உச்ச நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகளின் தீர்ப்பும் அமைந்துள்ளது. முன்னாள் பாரதப் பிரதமர் இராஜீவ்காந்தியின் படுகொலை சம்பவத்தில் அவருடன் சேர்த்து 17 பேர்கள், குறிப்பாக காவல்துறை அதிகாரிகளும், காங்கிரஸ் தலைவர்களும், தொண்டர்களும் இறந்துள்ளனர். அவர்களின் குடும்பத்தினரின் உணர்வுகளை, மனநிலையை தமிழகத்தை ஆளும், ஆட்சியும், கட்சியும் அதனை சார்ந்த கூட்டணி கட்சிகளும் உணர்ந்து செயல்படவேண்டும். காரணம் சிறையில் உள்ள மற்ற 6 பேர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என்று ஆளும் திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் தங்களின் எண்ணத்தை வலியுறுத்தி இருக்கிறர்கள்.

Tamil State Congress leader GK Vasan has accused the Congress of taking a double stand on the release of Perarivalan

பதவி நலனுக்காக வாய் மூடி வேடிக்கை

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர், முன்னாள் பாரதப் பிரதமரின் கொடூரக் கொலை செயலில் ஈடுப்பட்ட பேரறிவாளின் விடுதலையில் உறுதியான, உணர்வுபூானமான நிலையை எடுக்காமல், ஒருபுறம் ஒப்புக்கு போராட்டம் என்றும் மறுபுறம் பேரறிவாளின் விடுதலையை பாராட்டும்; கொண்டாடும் கூட்டணி கட்சிகளுடன் தொடர்ந்து கூட்டணி வைத்திருப்பது அவர்களின் இரட்டை நிலைப்பாட்டையையே எடுத்துக்காட்டுகிறது. மேலும் கட்சியின் முக்கிய மூத்த தலைவர்கள் இந்த உணர்வுபூர்வமான பிரச்சனையில் வாய்மூடி வேடிக்கை பார்ப்பது பதவி நலனுக்காகவா? அல்லது சுயநலனுக்காகவா? அல்லது கூட்டணி நலனுக்காகவா? என்று தெரியவில்லை. உண்மையிலேயே இராஜீவ்காந்தியின் கொலை சம்பவத்தை மறக்கவோ, மன்னிக்கவோ முடியாத நிலையில் இருப்பது உண்மையான காங்கிரஸ் தொண்டர்கள் தான்' என்பதை குறிப்பிட விரும்புகிறேன்.

Follow Us:
Download App:
  • android
  • ios