தமிழர்களின் பொற்காலமாக மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி அமைந்துள்ளது. தமிழ்நாட்டின் புது யுகமாக இந்த காலம் அமைந்துவிட்டது. ஏப்ரல் 14ம் நாள்தான் இந்திய அரசியல் சட்ட மாமேதை அம்பேத்கரின் பிறந்த நாள். ஆதலால், அப்பெருமகனார் கனவுகண்ட சமூகநீதி மலர உறுதிகொள்வோம்.
தமிழ் மாதங்கள் பன்னிரண்டில் முதலாவதாக வரும் சித்திரை மாதம் முதல் நாளை, புது வருடப்பிறப்பு விழாவாகக் கொண்டாடுகிறோம். இந்நிலையில், தமிழ்ப்புத்தாண்டு இன்று கொண்டாடப்படுவதையொட்டி, தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் ஆளுநர் ரவி, வைகோ, ராமதாஸ் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
ஓபிஎஸ், இபிஎஸ்
புதிய தமிழ் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ஒவ்வொரு தமிழரின் உள்ளத்திலும் புதிய சிந்தனைகள், புதிய முயற்சிகள், புதிய நம்பிக்கைகளோடு கூடிய புதிய உத்வேகம் பிறக்கட்டும். தமிழர்கள் அனைவரின் வாழ்விலும் வசந்தம் மலரட்டும், வளம் பெருகட்டும், அன்பு மேலோங்கி அமைதி நிலவட்டும்.
ஆளுநர் ஆர்.என்.ரவி
இந்த சித்திரை திருநாளில் உலகமெங்கும் உள்ள தமிழர்களுக்கு மனப்பூர்வமான வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நன்னாளில் உங்கள் ஒவ்வொருவரின் உள்ளங்களிலும் மகிழ்ச்சி பொங்கி நல்ல உடல் நலத்துடன் வாழ வேண்டும்.
வைகோ
தமிழர்களின் பொற்காலமாக மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி அமைந்துள்ளது. தமிழ்நாட்டின் புது யுகமாக இந்த காலம் அமைந்துவிட்டது. ஏப்ரல் 14ம் நாள்தான் இந்திய அரசியல் சட்ட மாமேதை அம்பேத்கரின் பிறந்த நாள். ஆதலால், அப்பெருமகனார் கனவுகண்ட சமூகநீதி மலர உறுதிகொள்வோம்.
ராமதாஸ்
தமிழ்நாட்டில் அனைத்து தரப்பு மக்களுக்கும் நலமும், வளமும் கிடைக்க வேண்டும். அனைத்து மக்களின் வாழ்விலும் மகிழ்ச்சி நிறைய வேண்டும். அதற்காக கடுமையாக உழைக்க இச்சித்திரை திருநாளில் தமிழர்களாகிய நாம் அனைவரும் உறுதியேற்றுக் கொள்வோம்.
அன்புமணி
சித்திரையில் தொடங்கப்படும் எந்தப் பணியும் வெற்றிகரமாக அமையும் என்பது தமிழர்களின் நம்பிக்கை. அந்த நம்பிக்கை உண்மையாக வேண்டும். தமிழர்கள் இனி தொட்டதெல்லாம் துலங்க வேண்டும்; அவர்களின் வாழ்வில் அமைதி, மனநிறைவு, வளம், வெற்றி, மகிழ்ச்சி பொங்குவதற்கு வாழ்த்துகிறேன்.
அண்ணாமலை
சிறப்பு வாய்ந்த தமிழ் மரபின் தமிழ் புத்தாண்டு பிறக்கும் இவ்வேளையில் நம்நாட்டு மக்கள் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள். எல்லா வளமும், நலமும் இப்புத்தாண்டில் மலரப்பெற்று, மகிழ்ச்சியுடன் சிறப்புற்று வாழ மனதார வேண்டுகிறேன்.
ஜி.கே.வாசன்
தமிழ்ப் புத்தாண்டு இனிவரும் காலங்களில் மக்கள் நோய் தொற்றினால் பாதிக்கப்படாமல் இருக்கவும், வருமானம் அதிகமாக ஈட்டுவதற்கும், தொழிலும், பொருளாதாரமும் மேம்படுவதற்கும் புதுப்பொலிவை ஏற்படுத்திக் கொடுக்கட்டும்.
டிடிவி.தினகரன்
புத்தாண்டில் வலிகள் மறையட்டும். வஞ்சனைகள் ஓயட்டும். நல்லோர் எண்ணங்கள் நடந்தேறட்டும், தீமைகள் அகலட்டும். ஆரோக்கியத்திலும், பொருளாதாரத்திலும் ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்து அனைவரும் முழுமையாக வெளியில் வரட்டும். ஒவ்வொருவரின் உள்ளத்திலும் மகிழ்ச்சி நிறையட்டும் என பிரார்த்திக்கிறேன்.
