தமிழகத்தின் உளவுத்துறை ஐஐியாக இருந்த சத்திய மூர்த்தி பணி ஓய்வு பெற்றதையொட்டி புதிய உளவுத்துறை ஐஐியாக ஈஸ்வரமூர்த்தி நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழக உளவுத்துறை ஐஜியாக இருப்பவர் சத்தியமூர்த்தி. இவரது பணிக்காலம் முடிவடைந்தது. ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது உளவுத்துறை ஐஜியாக நியமிக்கப்பட்டார். 2016 சட்டமன்ற தேர்தலின்போது தேர்தல் ஆணையத்தால் மாற்றம் செய்யப்பட்ட இவர் தேர்தல் முடிவுகள் வெளியானதும் மீண்டும் உளவுத்துறை ஐஐியாக நியமிக்கப்பட்டார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக பதவி ஏற்ற பின்னர் தொடர்ந்து மூன்றாவது முறையாக உளவுத்துறை ஐஜியாக நியமிக்கப்பட்டார்.சத்தியமூர்த்தி.

தமிழக காவல்துறையில் உளவுத்துறை பதவி அதிகாரம் மிக்க பதவியில் நீண்ட காலம் பதவியில் இருந்தவர் என்கிற பெருமையை பெற்றிருக்கிறார் சத்தியமூர்த்தி.இந்தநிலையில், சென்னை மத்தியக் குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனராக உள்ள ஈஸ்வரமூர்த்தி, உள்நாட்டு பாதுகாப்பு பிரிவு ஐஜி பதவியை கூடுதலாக கவனித்து வந்தார். தமிழகத்தின் புதிய உளவுத்துறை ஐஜியாக ஈஸ்வர மூர்த்தியை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.