Asianet News TamilAsianet News Tamil

ஜாதி ரொம்ப முக்கியம்... தமிழக பாஜக தலைவர் நியமனத்தில் பாஜக மேலிடம் எடுத்த அதிரடி முடிவு..!

தற்போதும் நாடார்களை திருப்திபடுத்தவே தமிழிசைக்கு ஆளுநர் பதவியை கொடுத்துவிட்டு புதிய தலைவரை பாஜக தேடி வருகிறது. இதில் கருப்பு முருகானந்தம் பெயர் முன்னிலையில் உள்ளது. ஆனால் அவரது பின்னணியில் ஏராளமான வழக்குகள் மற்றும் சர்ச்சைகள் உள்ளன. மேலும் பாஜக தலைவர் என்கிற மிகப்பெரிய பொறுப்பை தாங்கும் அளவிற்கு அவர் செயல்படுவாரா என்கிற கேள்வியை சிலர் மேலிடத்தில் முன்வைத்துள்ளனர். ஆனால் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த தேவர் சமுதாயம் என்பதால் அவர் பெயர் தற்போதும் பரிசீலனையில் உள்ளது.

tamil nadu president...new plan BJP head office
Author
Tamil Nadu, First Published Sep 4, 2019, 10:43 AM IST

தமிழகத்தில் பெரும்பான்மை ஜாதியாக இருக்க கூடிய ஒன்றில் இருந்து தான் பாஜகவின் அடுத்த தமிழக தலைவர் வருவார் என்கிறார்கள்.

தமிழிசை ஆளுநர் ஆன பிறகு தமிழக பாஜக தலைவர் பதவிக்கு போட்டா போட்டி நடக்கிறது. சீனியர்கள் சி.பி.ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன், ஹெச்.ராஜா உள்ளிட்டோருடன் ஜூனியர்கள் கருப்பு முருகானந்தம், நயினார் நாகேந்திரன், ராகவன் ஆகியோர் தமிழக பாஜக தலைவர் கனவில் உள்ளனர். இவர்களில் கருப்பு முருகானந்தம் மற்றும் சி.பி.ராதாகிருஷ்ணன் ஆகியோர் தான் பெரும்பான்மையாக இருக்க கூடிய ஜாதியை சேர்ந்தவர்கள்.

 tamil nadu president...new plan BJP head office

கடந்த 2014ம் ஆண்டு ஆட்சிக்கு வந்தது முதலே பாஜக நிர்வாகிகள் நியமனத்தில் அந்தந்த மாநில ஜாதிக்கு ஏற்றுவாறு தான் முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. 2014 தேர்தலில் நாடார்கள் ஒட்டு மொத்தமாக தங்களை ஆதரித்ததாக கருதியே அந்த சமுதாயத்தை சேர்ந்த பொன் ராதாகிருஷ்ணனுக்கு மத்திய அமைச்சர் பதவியும், தமிழிசைக்கு பாஜக தலைவர் பதவியும் கொடுக்கப்பட்டது. tamil nadu president...new plan BJP head office

தற்போதும் நாடார்களை திருப்திபடுத்தவே தமிழிசைக்கு ஆளுநர் பதவியை கொடுத்துவிட்டு புதிய தலைவரை பாஜக தேடி வருகிறது. இதில் கருப்பு முருகானந்தம் பெயர் முன்னிலையில் உள்ளது. ஆனால் அவரது பின்னணியில் ஏராளமான வழக்குகள் மற்றும் சர்ச்சைகள் உள்ளன. மேலும் பாஜக தலைவர் என்கிற மிகப்பெரிய பொறுப்பை தாங்கும் அளவிற்கு அவர் செயல்படுவாரா என்கிற கேள்வியை சிலர் மேலிடத்தில் முன்வைத்துள்ளனர். ஆனால் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த தேவர் சமுதாயம் என்பதால் அவர் பெயர் தற்போதும் பரிசீலனையில் உள்ளது. tamil nadu president...new plan BJP head office

இது தவிர கவுண்டர், வன்னியர் போன்ற ஜாதியிலும் தலைவரை தேடும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கிடையே வானதி சீனிவாசன் பொன் ராதாகிருஷ்ணன் மூலமாகவும், ராகவன் நிர்மலா சீதாராமன் மூலமாக தலைவர் பதவிக்கு லாபி செய்து வருகின்றனர். ஆனால் நிச்சயமாக கவுண்டர், வன்னியர், தேவர் அல்லது நாடார் சமுதாயத்தை சேர்ந்த ஒருவருக்கு தான் தமிழக பாஜக தலைவர் பதவி என்கிறார்கள்.

Follow Us:
Download App:
  • android
  • ios