தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகேயுள்ள பண்ணைவயலை சேர்ந்த கருணாநிதி என்பவர். பாஜக பிரமுகர் இளங்கோவனின் உறவினர். கருணாநிதிக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதையடுத்து, அவர் தஞ்சாவூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். 

சிகிச்சை பலனின்றி கருணாநிதி உயிரிழந்ததையடுத்து, அவரது உடலை சுகாதாரத்துறை விதிமுறைகளின்படி, அடக்கம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அவரது உடலை சொந்த ஊருக்கு எடுத்துச்சென்று அடக்கம் செய்ய உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடலை குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் வைத்திருக்க முடியாது என்பதாலும், உடலை எடுத்துச்செல்வதற்கான நடமுறை சிக்கல்களையும் எடுத்துரைத்து மருத்துவமனை சார்பில் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆனால் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகத்தினர், இறந்த நபரின் உடலை அவரது சொந்த ஊரான பண்ணை வயலிலேயே அடக்கம் செய்யும் பொறுப்பை ஏற்று, பொறுப்புடன் அதை செய்தும் கொடுத்துள்ளனர். ஏற்கனவே கோவையில் உயிரிழந்த கரூரை சேர்ந்த ஒரு நபரையும் அடக்கம் செய்வதற்கு தமமுக தன்னார்வலர்கள் உதவியுள்ளனர். 

மதத்தை கடந்த மனிதநேயம் கொண்ட தமமுக-வினரின் செயல்பாடுகள், மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.