Asianet News TamilAsianet News Tamil

அதிவேகமாக செயல்படும் அதிமுக.. பாமக டீலை முடித்த கையோடு தேமுதிக தலைவர் விஜயகாந்த்துடன் அமைச்சர்கள் சந்திப்பு..!

பாமகவிற்கு 23 தொகுதிகளை ஒதுக்கிய கையோடு, அதிமுக அடுத்ததாக தேமுதிக கூட்டணியை உறுதி செய்வதை துரிதப்படுத்தியுள்ளது. தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை அமைச்சர்கள் தங்கமணி மற்றும் வேலுமணி ஆகிய இருவரும் சந்தித்துள்ளனர்.
 

tamil nadu ministers thangamani and velumani meet dmdk president vijayakanth to commit alliance deal with admk
Author
Chennai, First Published Feb 27, 2021, 9:46 PM IST

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6ம் தேதி நடக்கவுள்ளது. தேர்தல் தேதி நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில், ஆளுங்கட்சியான அதிமுக மற்றும் பிரதான எதிர்க்கட்சியான திமுக ஆகிய 2 கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தைகள், தொகுதி பங்கீடு ஆகிய பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றன.

ஆளுங்கட்சியான அதிமுக கூட்டணி ஏற்கனவே கிட்டத்தட்ட உறுதியாகியிருந்ததால், அதிவேகமாக செயல்பட்டுவருகிறது. அதிமுகவுடன் பாஜக, பாமக கூட்டணி உறுதியாகிவிட்டது. பாமகவுடனான கூட்டணியை உறுதி செய்து அக்கட்சிக்கு 23 தொகுதிகள் வழங்குவதை இன்று அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் உறுதி செய்தார்.

tamil nadu ministers thangamani and velumani meet dmdk president vijayakanth to commit alliance deal with admk

அந்த டீலை முடித்த அதே வேகத்துடன், தேமுதிகவுடனான கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த அமைச்சர்கள் தங்கமணி மற்றும் வேலுமணி ஆகிய இருவரும் தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை அவரது இல்லத்தில் சந்தித்துள்ளனர். தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதமே உள்ளதால் கூட்டணியை விரைவில் உறுதி செய்தால்தான் தொகுதி பங்கீடு, வேட்பாளர்கள் அறிவிப்பு ஆகியவற்றை துரிதப்படுத்த முடியும் என்பதால், இந்த டீல் முடிக்கப்பட்டு, மற்ற விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios