பஞ்சாப்பில் சித்துவை எதிர்த்து நிற்கும் தமிழக ஐபிஎஸ் அதிகாரி... ரோல் மாடலான மு.க.ஸ்டாலின்..!

தமிழகத்தைப் போல என் சொந்த மாநிலமான பஞ்சாபை முன்னேற்றப் பாதையில் அழைத்து செல்லவே பதவி விலகுகிறேன்; என் உதவி பஞ்சாபிற்கு தேவைப்படுகிறது

Tamil Nadu IPS officer opposes Sidhu in Punjab ... Role model MK Stalin

டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தின் தலைமை ஆணையரான மூத்த ஐஏஎஸ் அதிகாரி ஜக்மோகன் சிங் ராஜு தனது ராஜினாமா கடிதத்தை கடந்த 25ம் தேதி அளித்தர். அதை தமிழக அரசும் ஏற்றுக்கொண்டது. அந்த அதிகாரிக்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகள் பணி இருந்தது, மேலும் அவரது சொந்த மாநிலமான பஞ்சாபில் அரசியலில் நுழைய இருப்பதாகவும் கூறப்பட்டது.Tamil Nadu IPS officer opposes Sidhu in Punjab ... Role model MK Stalin

சேவையிலிருந்து விருப்ப ஓய்வு பெறுவதற்கான (விஆர்எஸ்) அவரது கோரிக்கையை பரிசீலித்த பின்னர், அகில இந்திய சேவைகளின் விதி 16 (2) விதியின் கீழ் ஜனவரி 27 பிற்பகல் முதல் அவர் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

பஞ்சாபில் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள காங்கிரஸ் தீவிர முயற்சி செய்து வருகிறது. தற்போதைய முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி, தன்னை முதல்வர் வேட்பாளராக கட்சி அறிவிக்க வேண்டும் என்கிறார்.

இதையும் படியுங்கள்:- திமுகவில் மீண்டும் 'வாரிசு' அரசியல்.. சர்ச்சையை கிளப்பும் அமைச்சரின் மகன் !!

இன்னொரு பக்கம் முன்னாள் கிரிக்கெட் வீரரும், மாநில காங்கிரஸ் தலைவருமான நவ்ஜோத் சிங் சித்து, தன்னைத் தான் முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று துடிக்கிறார். இந்நிலையில் யாரையும் அறிவிக்காமலேயே தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி. அமிர்தசரஸ் கிழக்கு தொகுதியில் போட்டியிடும் சித்துவிற்கு கடும் போட்டி நிலவுகிறது.Tamil Nadu IPS officer opposes Sidhu in Punjab ... Role model MK Stalin

இவரை எதிர்த்து அகாலி தள வேட்பாளராக நிற்பவர் பிக்ரம் சிங் மஜிதா. கட்சியிலும், தொகுதியிலும் மிகவும் ஸ்ட்ராங்கானவர். இங்கு, பா.ஜ., தரப்பில் போட்டியிடுபவர் தமிழக 'கேடரை' சேர்ந்த முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஜக்மோகன் சிங் ராஜு. 

இதையும் படியுங்கள்:-ஒரேநாளில் பல்டியடித்த ப்ரியங்கா காந்தி... காங்கிரஸுக்கு ஓட்டுப்போடுவது வேஸ்ட்... கெஞ்சும் மாயாவதி..!

இவர் மிக இளம் வயதில், தமிழகத்தில் ஐ.ஏ.ஏஸ்., அதிகாரியாக நியமிக்கப்பட்டவர். தமிழ் நன்றாக பேசத் தெரியும். தமிழக அரசியல்வாதிகளுக்கு பரிச்சயமானவர். அவர் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு அனுப்பிய ராஜினாமா கடிதத்தில், 'தமிழகத்தைப் போல என் சொந்த மாநிலமான பஞ்சாபை முன்னேற்றப் பாதையில் அழைத்து செல்லவே பதவி விலகுகிறேன்; என் உதவி பஞ்சாபிற்கு தேவைப்படுகிறது' என உருக்கமாக எழுதி இருந்தார்.Tamil Nadu IPS officer opposes Sidhu in Punjab ... Role model MK Stalin

என்னை பெரியார் கொள்கைகள் வழிநடத்தின. பஞ்சாப் தேர்தலில் சித்துவை எதிர்ப்பதற்காக ராஜினாமா செய்த தமிழக ஐஏஎஸ் அதிகாரி முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எழுதிய கடிதத்தில், "பெரியாரின் பிறந்தநாளை சமூகநீதி நாளாக அறிவித்தபோது, ​​எனது மனசாட்சியே கலங்கியது" என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், மக்களுக்குச் சேவை செய்வதில் ஸ்டாலினின் அடிச்சுவடுகளைப் பின்பற்ற உள்ளதாகவும் என்றும் நெகிழ்ந்துள்ளார். மேலும், "எனது வாழ்க்கை முழுவதும் சீக்கிய குருக்களின் போதனைகளாலும், பாபா சாகேப் அம்பேத்கர் மற்றும் 'பெரியார்' ஈ.வெ. ராமசாமி கொள்கைகளாலும் வழிநடத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு, பஞ்சாப் இரண்டும் வலுவான பிராந்திய கட்சிகளால் ஆளப்படுவது முதல், பல வழிகளில் மிகவும் ஒற்றுமை மிகுந்ததாக உள்ளது. ஆனால் ஒரே ஒரு வித்தியாசம் என்னவெனில், பஞ்சாப் இப்போது வளர்ச்சியில் அடிமட்டத்துக்கு போய்விட்டது, அதே நேரத்தில் தமிழ்நாடு எழுச்சி பெற்றுள்ளது" என்றும் அந்தக் கடிதத்தில் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஜக்மோகன் சிங் ராஜூ குறிப்பிட்டு இருந்தார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios