தண்ணீர் தட்டுப்பாடு பஞ்சம் தமிழகத்தில் தலைவிரித்தாடுகிறது. இதனால் தமிழகத்தில் சில இடங்களில் உணவு விடுதிகள் மூடப்படுவதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன.

அக்னி நட்சத்திரம் முடிவடைந்தும் வெயில் வெளுத்து வாங்கி வருகிறது. கோடை மழை கைவிட்டதால் குளம், குட்டை உள்ளிட்ட நீர்நிலைகள் வறண்டு காணப்படுவதால் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் மனிதர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். லாரிகளில் தண்ணீர் வரும் தண்ணீர் 25 லிட்டர் ரூ.10 க்கு விற்கப்படுகிறது.

அதுவும் தெரிந்தவர்களுக்கு மட்டுமே இந்த சகாய விலை. இல்லையென்றால் தண்ணீரே கொடுப்பதில்லை. தண்ணீருக்கே அதிக செலவு செய்வதால் கட்டுபடியாகாத ஹோட்டல்கள் ஆங்காங்கே மூடப்பட்டு வருகின்றன. சில இடங்களில் ‘’ தண்ணீர் இல்லாத காரணத்தினால் சாப்பாடு நிறுத்தப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதால் வாடிக்கையாளர்கள் சிரமத்திற்கு மன்னிக்க வேண்டுகிறோம்’ என அறிவிப்பு பலகைகளை வைத்து வருகின்றனர்.  

கால்நடைகளை வளர்க்க முடியாமல் கால்நடை வளர்ப்போர் தவித்து வருகின்றனர். தற்போது நாளுக்கு நாள் வெளுத்தும் வாங்கும் வெயிலால், மேய்ச்சலுக்கு செல்லும் மாடு, ஆடுகள் தண்ணீருக்காக குளத்திலும், குட்டையிலும் தேங்கி கிடக்கும் கழிவுநீரை குடித்து உயிர் வாழக்கூடிய அவலநிலை ஏற்பட்டுள்ளது. விலை கொடுத்து தண்ணீர் அதுமட்டுமின்றி கோடை வெயிலின் தாக்கத்தால், கால்நடைகளுக்கு எடை குறைவு ஏற்படுகிறது.

ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடைகளை பாதுகாக்க டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீரை விலை கொடுத்தும், குளம், குட்டைகளில் தேங்கி கிடைக்கும் நீரை கால்நடைகளுக்கு கொடுத்து வருவதாக கால்நடைவளர்போர் கூறுகின்றனர். அதே நேரம், தண்ணீரின்றி கால்நடைகள் உயிரிழக்கும் அபாய நிலை உள்ளது. எனவே, கால்நடைகளை பாதுகாக்க நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் சம்பந்தப்பட்ட துறையினர் தண்ணீர் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர். இந்தநிலையில், கிராமங்களில் கால்நடைகளுக்கு தேவையான தண்ணீர் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என மாவட்ட கலந்துரைத்துறை அதிகாரிகளுக்கு கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.