Asianet News TamilAsianet News Tamil

எந்தவொரு வேலையும் பார்க்காமல்.. கிடைக்கும் மேடைகளில் அரசியல் பேசும் தமிழக ஆளுநர்.. செல்வப்பெருந்தகை விளாசல்!

 தமிழ்மொழிக்கும், தமிழர்களுக்கும் சிறப்பு செய்திட்ட ராபர்ட் கால்டுவெல் என்ற மொழியியல் அறிஞரை சிறுமைப்படுத்தும் முயற்சியில் இழிவு படுத்தும் விதமாக ஆளுநர் பேசியிருப்பதற்கு வன்மையான கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

Tamil Nadu Governor RN Ravi who speaks politics on available platforms... selvaperunthagai tvk
Author
First Published Oct 24, 2023, 6:26 AM IST | Last Updated Oct 24, 2023, 6:28 AM IST

சமஸ்கிருதத்தின் முகமுடியை கிழித்து, தமிழ்மொழியின் சிறப்பை உலகிற்கு எடுத்துக்காட்டியவர்களை இழித்து பேசுவது ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தங்களில் மூழ்கியவர்களால் மட்டும்தான் முடியும் என ஆளுநர் ஆர்.என்.ரவியை செல்வப்பெருந்தகை விமர்சித்துள்ளார். 

இதுதொடர்பாக சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவரும், எம்எல்ஏவுமான செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில்;- திருச்சியில் நேற்று 23.10.2023 நடைபெற்ற தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆளுநர் 'பிரித்தாளும் கொள்கைகளுக்காகவே கால்டுவெல் போன்றவர்கள் அனுப்பப்பட்டார்கள்' என்று தமிழ்மொழிக்கும், தமிழர்களுக்கும் சிறப்பு செய்திட்ட ராபர்ட் கால்டுவெல் என்ற மொழியியல் அறிஞரை சிறுமைப்படுத்தும் முயற்சியில் இழிவு படுத்தும் விதமாக ஆளுநர் பேசியிருப்பதற்கு வன்மையான கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

இதையும் படிங்க;- சைலேந்திரபாபுவை நியமிக்க முடியாது..! வேறு ஒருவரை பரிந்துரையுங்கள்- திமுக அரசிற்கு அதிர்ச்சி கொடுத்த ஆளுநர் ரவி

Tamil Nadu Governor RN Ravi who speaks politics on available platforms... selvaperunthagai tvk

அறிஞர் ராபர்ட் கால்டுவெல் தமிழ்நாட்டில் வருவதற்கு முன்பே இந்தியாவின் தொன்மையான, சிறப்பான மொழி சமஸ்கிருதம் என்றும், தமிழ்மொழி உட்பட அனைத்து மொழிகளும் அந்த மொழியிலிருந்துதான் தோன்றியது என்ற மாயை இந்தியாவில் நிலவியது. மொழியியல் அறிஞர் ராபர்ட் கால்டுவெடுல் பல மொழிகளை ஆராய்ந்து, சமஸ்கிருதத்திற்கு முன்பிருந்த மொழி தமிழ்மொழி என்றும், அதன் தொன்மையையும், சிறப்பையும் ஆய்வின் மூலம் உலகத்திற்கு உணர்த்தியவர்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D 

Tamil Nadu Governor RN Ravi who speaks politics on available platforms... selvaperunthagai tvk

சமஸ்கிருதம் இல்லாமல் தமிழ்மொழியால் இயங்க முடியும் என்றும் சங்க காலத்தில் இருந்தே தமிழர்கள் பிற நாட்டினருடன் தொடர்பில் இருந்தார்கள் என்று முதன் முதலில் அச்சில் ஏற்றியவர். தொல்பொருள் ஆராய்ச்சியின் மூலம் பண்டைய தமிழர்களின் நாகரீகம் குறித்தும் வெளியிட்டவர். சமஸ்கிருதத்தின் முகமுடியை கிழித்து, தமிழ்மொழியின் சிறப்பை உலகிற்கு எடுத்துக்காட்டியவர்களை இழித்து பேசுவது ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தங்களில் மூழ்கியவர்களால் மட்டும்தான் முடியும்.

இதையும் படிங்க;-  மத வெறியை தூண்டி விடும் திமுக.. பலிகடா ஆகும் முஸ்லிம்கள்.. பாஜகவை தூக்கி பிடிக்கும் வேலூர் இப்ராஹிம்..!

Tamil Nadu Governor RN Ravi who speaks politics on available platforms... selvaperunthagai tvk

தமிழ்நாடு சட்டமன்றத்தில் இயற்றி அனுப்பிய மசோதாக்கள், தமிழ்நாடு அரசின் பரிந்துரைகள் எதையும் நிறைவேற்றாமல், ஆளுநருக்கு உரிய எந்தவொரு வேலையும் பார்க்காமல், கிடைக்கும் மேடைகளில் அரசியல்வாதி போல பேசுகிறார் தமிழ்நாட்டின் ஆளுநர். தமிழ்மொழிக்கும், தமிழர்களுக்கும் எவர்கள் நல்லது செய்கிறார்களோ அதை பொறுத்துக் கொள்ள முடியாமல், அவர்களை இழிவு படுத்தும் நோக்கத்தோடு பேசும் தமிழ்நாட்டின் ஆளுநருக்கு மீண்டும் ஒருமுறை எனது வன்மையான கண்டனங்களை பதிவு செய்கிறேன் என செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios