தமிழகத்தில் கொரோனா தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகம் முழுவதும் 144 ஊரடங்கு உத்தரவு இன்னும் நீக்கப்படவில்லை.சென்னையை கொரோனா மையம் கொண்டுள்ளதால் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களுக்கு முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இன்னும் 3மாதங்களுக்கு ரேசன் பொருட்கள் வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.அதற்கான நடவடிக்கையை தமிழக அரசு எடுத்து வருகிறது.

மத்திய நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொது வினியோக திட்டத்துறை மந்திரி ராம்விலாஸ் பஸ்வானுடன் காணொலிக் காட்சி மூலம் தமிழக உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சர் ஆர்.காமராஜ்  ஆலோசனை மேற்கொண்டதில் அடுத்த மூன்று மாதங்களுக்கு ரேசன் பொருள்கள் இலவசமாக வழங்க நடவடிக்கை எடுத்துவருவதாக  அமைச்சர் ஆர்.காமராஜ் தெரிவித்துள்ளார். மேலும் அவர் பேசும் போது..

 "சென்னை திருவள்ளுர் காஞ்சிபுரம் போன்ற மாவட்டங்களில் உள்ள சில பகுதிகளுக்கு முழு ஊரடங்கு உத்தரவு இன்று முதல் 30-ந் தேதிவரை அமல்படுத்தப்படுகிறது. இதனால் ஏற்படும் இன்னல்களை மக்கள் எதிர்கொள்ளும் வகையில் அனைத்து அரிசி ரேசன் அட்டைதாரருக்கும் ரூ.1,000 வழங்கப்படும் என்று முதல்வர் பழனிச்சாமி அறிவித்துள்ளார்.இதற்காக ரூ.218.35 கோடிநிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது".

"ஒரே நாடு ஒரே ரேசன் அட்டை" என்ற திட்டத்துக்கான அரசாணையை 2019-ம் ஆண்டு செப்டம்பரில் தமிழக அரசு பிறப்பித்துள்ளது. இதுதொடர்பாக மத்திய அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. பொதுவினியோக திட்ட பயனாளிகளில் 99.72 சதவீதத்தினர் ஆதாரை இணைத்துள்ளனர்.இத்திட்டம் வரும் செப்டம்பரில் ‘ஒரே நாடு ஒரே ரேசன் அட்டை’ திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு தயாராக இருக்கிறது.

"தமிழகத்தில் ஜூலை, ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களுக்கு ரேசன் குடும்பஅட்டைதாரருக்கு இலவசமாக பொருள்கள் வழங்குவதற்கு தேவையான அரிசி மற்றும் பருப்பை அளிக்க வேண்டும் என்று கடந்த 12-ந் தேதி முதலமைச்சர் பழனிச்சாமி மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருந்தார். அதை அனுமதித்து தேவையான அளவு ரேசன் பொருட்களை ஒதுக்க வேண்டும்".