Asianet News TamilAsianet News Tamil

முடிவடைந்தது கால அவகாசம்...! அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து தமிழக அரசு தகவல்...!

Tamil Nadu Government Information on the next action plan
Tamil Nadu Government Information on the next action plan
Author
First Published Mar 29, 2018, 5:41 PM IST


காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான மத்திய அரசின் காலக்கெடு முடிவடைந்ததையடுத்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து சட்ட வல்லுநர்களுடனான ஆலோச்னைக்கு பிறகு இன்று இரவு அல்லது நாளை காலை தமிழக அரசு அறிவிக்கும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 காவிரி விவகாரத்தில் இறுதித் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், தமிழகத்திற்கான தண்ணீரின் அளவைக் குறைத்தது. அதே நேரத்தில் காவிரி நீரை பங்கிட்டுக் கொள்வது தொடர்பாக முடிவு செய்ய காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை  எடுக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து கால அவகாசம் முடியும் வரையுமே மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது தமிழக மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகாவில் வரும் மே மாதம் 12 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், உச்சநீதிமன்றத்தின் உத்தரவை மத்திய அரசு நிறைவேற்றுமா என சந்தேகம் எழுந்துள்ளது.

இந்நிலையில், கால அவகாசம் இன்று மாலையுடன் நிறைவடைந்தது. இதுகுறித்து நேற்று பேசிய முதலைமைச்சர் கடைசி 24 மணி நேரம் கூட மத்திய அரசுக்கு அவகாசம் கொடுத்தது. 

இதையடுத்து தற்போது கால அவகாசம் முடிவடைந்துள்ளநிலையில், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து சட்ட வல்லுநர்களுடனான ஆலோச்னைக்கு பிறகு இன்று இரவு அல்லது நாளை காலை தமிழக அரசு அறிவிக்கும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios