Tamil Nadu Government gave aayutha Pooja bonus for Government employees
போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்களின் சம்பளம் பிடித்தம் செய்யப்படாது என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், 7-வது ஊதியக்குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் சம்பளம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளின் அடிப்படையில் அரசு ஊழியர்கள் கடந்த 7-ம் தேதி முதல் 10 நாட்கள் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தினர்.
போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் மீது எந்த மாதிரியான நடவடிக்கைகள் எடுக்கப்படும்? அவர்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவது தொடர்பான விளக்கங்களை அளிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. அதற்கு, போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கப்படாது என அரசு சார்பில் பதிலளிக்கப்பட்டது.
போராட்டத்தைக் கைவிட்டு பணிக்குத் திரும்ப வேண்டும் என்ற உயர்நீதிமன்றத்தின் உத்தரவை ஏற்று அரசு ஊழியர்கள் பணிக்குத் திரும்பினர்.
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்யக்கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், அரசு ஊழியர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்யக்கூடாது என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதனால் இந்த மாதம் முழு சம்பளமும் வருமா? என்ற ஏக்கத்தில் இருந்த ஊழியர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
