Asianet News TamilAsianet News Tamil

தமிழகத்தில் ஏப்ரல் 30ம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு... தமிழக அரசு அறிவிப்பு..!

தமிழகத்தில் ஏப்ரல் 30 ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது. ஏற்கனவே அமலில் உள்ள ஊரடங்கு இன்றுடன் நிறைவடைய உள்ள நிலையில் நீட்டிக்கப்பட்டு உள்ளது.
 

Tamil Nadu government announces curfew extension till April 30
Author
Tamil Nadu, First Published Mar 31, 2021, 1:23 PM IST

தமிழகத்தில் ஏப்ரல் 30 ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது. ஏற்கனவே அமலில் உள்ள ஊரடங்கு இன்றுடன் நிறைவடைய உள்ள நிலையில் நீட்டிக்கப்பட்டு உள்ளது.

Tamil Nadu government announces curfew extension till April 30

தமிழகத்தில் ஏப்ரல் 30 ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது. ஏற்கனவே அமலில் உள்ள ஊரடங்கு இன்றுடன் நிறைவடைய உள்ள நிலையில் மீண்டும் நீட்டிக்கப்பட்டு உள்ளது என தமிழக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.Tamil Nadu government announces curfew extension till April 30

பொது இடங்களில் முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். சர்வதேச விமான போக்குவரத்துக்கான தடை தொடரும். தேவைப்பட்டால் 144 தடை உத்தரவு ஆட்சியர்கள் விதிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளதுதமிழகத்தில் கொரோனா பாதிப்பு நேற்று ஒரேநாளில் 2 ஆயிரத்து 342 பேருக்கு உறுதி செய்யப்பட்டது. அத்துடன் சென்னையைப் பொறுத்தவரை மேலும் 874 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ள நிலையில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 14 ஆயிரத்து 846ஆக அதிகரித்துள்ளது.

 Tamil Nadu government announces curfew extension till April 30

கடந்த 24 மணிநேரத்தில் 16 பேர் கொரோனாவால் சிகிச்சை பலனின்றி இறந்த நிலையில் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 12 ஆயிரத்து 700 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கொரோனா பரவலைத் தடுக்க அனைவரும் தயவு செய்து முக கவசம் அணியுங்கள். தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் பங்கேற்க வருவோர் மாஸ்க் அணிய வேண்டும் என அரசியல் கட்சிகள் அறிவுறுத்துங்கள் என்று சுகாதாரத்துறை கூறி வருகிறது. சென்னையில் பல்வேறு இடங்களில் தற்போது பாதிப்பு அதிகரிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ,கோயம்புத்தூரில் பாதிப்பு அதிகரித்து வருகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios