தமிழகத்தில் மார்ச் 31-ம் தேதி வரை அனைத்து வாரச்சந்தைகள், ஜவுளிக் கடைகளையும் மூடுவதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா, இந்தியாவையும் பீதிக்குள்ளாக்கிவருகிறது. இந்தியாவில் இதுவரை 180 பேர் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு 4 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் பாதிப்பைத் தடுப்பதற்கி பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டுள்ளன.
இந்நிலையில் ஏற்கனவே தமிழக அரசு அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் மார்ச் 31 வரை விடுமுறை அறிவித்துள்ளது. மேலும் தியேட்டர்கள், மால்கள், வணிக வளாகங்கள் ஆகியவற்றையும் மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 
இந்நிலையில் தமிழக அரசு மார்ச் 31 வரை அனைத்து வாரச் சந்தைகளையும் மூட வேண்டும். பெரிய ஜவுளிகடைகள், பல்பொருள் அங்காடிகள், பெரிய நகை கடைகள் ஆகியவற்றையும் 20ம் தேதி முதல் மார்ச் 31-ம் தேதி வரை மூட வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால் அத்தியாவசிய பொருட்கள் விற்கும் கடைகள், பல்பொருள் அங்காடிகள், காய், கனி கடைகள், மருந்தகங்கள், உணவகங்கள் வழக்கம் போல் திறந்திருக்கும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.