2019 மக்களவைத் தேர்தலை தமிழகத்தில் திமுக கூட்டணியில் இருந்து கொண்டு காங்கிரஸ் எதிர்கொள்கிறது. திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு தமிழகத்தில் 9 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் 1  தொகுதி என மொத்தம் 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

திமுக கூட்டணியில் இருக்கும் விசிக, மதிமுக, மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் , கொமதேக, ஐஜெகே, இந்திய யூனியன் முஸ்லீல் லீக் ஆகிய கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை அறிவித்து விட்டன. ஆனால் கூட்டணியில் உள்ள தேசியக் கட்சியான காங்கிரஸ் மட்டும்  வேட்பாளர் பட்டியலை வெளியிடாமல் இருந்தது.

இந்நிலையில்  பேட்பாளர்களை அறிவிப்பது தொடர்பாக டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது, இதில் தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி மற்றும் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். 

இதனிடையே இன்று அதிகாலை தமிழகம் மற்றும் புது,சசேரியில் காங்கிரஸ் கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி..

கிருஷ்ணகிரி -  டாக்டர் ஏ.செல்லகுமார்
திருவள்ளூர்  - டாக்டர் கே.ஜெயக்குமார்
ஆரணி - எம்.கே.விஷ்ணு பிரசாத்
கரூர் - ஜோதிமணி
திருச்சி - சு.திருநாவுக்கரசர்
விருதுநகர் - மாணிக்கம் தாகூர்
கன்னியாகுமரி - ஹெச்.வசந்தகுமார்
தேனி-  ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்
புதுவை – வைத்தியலிங்கம்

அதே நேரத்தில் சிவகங்கை தொகுதியில் யார் போட்டியிடுவார் என்ற விவரம் அறிவிக்கப்படவில்லை.