கொரோனாவை எதிர்கொள்ள முதல்வர் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நிதியளிக்குமாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

இந்தியாவில் கொரோனா 2ம் அலை அதிதீவிரமாக பரவிவருகிறது. தேசியளவில் தினமும் 4 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர். தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் பாதிப்பு மிகக்கடுமையாக உள்ளது.

கொரோனாவை எதிர்கொள்ள மத்திய அரசுக்கும், மாநில அரசுகளுக்கும் பல தரப்பினரும் தங்களால் முடிந்த உதவிகளை செய்துவருகின்றனர். அந்தவகையில், கொரோனாவை எதிர்கொள்ள தாராளமாக நிதியுதவி செய்யுமாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

முதல்வர் பொது நிவாரண நிதிக்கு இந்திய ஓவர்சீஸ் வங்கி கணக்கு எண் - 117201000000070, IFSC - IOBA0001172 என்ற வங்கிக்கணக்கில் நிதியை செலுத்தலாம்.

மேலும் tncmprf@iob என்ற UPI IDயை பயன்படுத்தியும் கொரோனா நிவாரண நிதியை செலுத்தலாம்.