12:20 PM (IST) Mar 18

கலைஞர் நினைவிடங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை

பட்ஜெட் தாக்கலை தொடர்ந்து சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினர். இதில், அமைச்சர்கள் சேகர்பாபு, பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர். 

12:18 PM (IST) Mar 18

Tamil Nadu Budget 2022 : தமிழக பட்ஜெட் ஏமாற்றம் அளிக்கிறது... எடப்பாடி பழனிசாமி

அதிமுக ஆட்சியில் மூலதன செலவுகளுக்காகவே நிதி செலவளிக்கப்பட்டது. அதிமுக ஆட்சியில் மூலதன செலவுகளுக்காகவே நிதி செலவளிக்கப்பட்டது. திமுக ஆட்சியில் 2 ஆண்டுகளில் ரூ.2.28 கோடி கடன் பெற உள்ளனர் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

12:15 PM (IST) Mar 18

Tamil Nadu Budget 2022 : 1 மணி நேரம் 54 நிமிடம் பட்ஜெட்டை வாசித்த நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட் உரையை வாசித்து முடித்தார். 1 மணி நேரம் 54 நிமிடம் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து அவையை சபாநாயகர் ஒத்திவைத்தார்.

12:14 PM (IST) Mar 18

Tamil Nadu Budget 2022 :அனைத்து மாவட்டங்களிலும் புத்தக கண்காட்சி

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் சென்னையை போன்று புத்தக கண்காட்சி நடத்தப்படும். ரூ.5.6 கோடி செலவில் அனைத்து மாவட்டங்களிலும் சென்னையை போல புத்தக கண்காட்சி நடத்தப்படும். புதிதாக பிரிக்கப்பட்ட 6 மாவட்டங்களில் ரூ.36 கோடி மதிப்பீட்டில் மத்திய நூலகங்கள் அமைக்கப்படும் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்.

12:09 PM (IST) Mar 18

Tamil Nadu Budget 2022 : வானிலையை கணிக்க சூப்பர் கம்ப்யூட்டர்

வானிலையை துல்லியமாக கணிக்க சூப்பர் கம்ப்யூட்டர் உள்ளிட்ட புதிய கட்டமைப்பை உருவாக்க ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

12:00 PM (IST) Mar 18

Tamil Nadu Budget 2022 : பழமையான கோயில்களை போல, தேவாலயங்கள், பள்ளிவாசல்கள், தர்க்காக்களை பழுது பார்க்க நிதி

பழமையான கோயில்களை போல, தேவாலயங்கள், பள்ளிவாசல்கள், தர்க்காக்களை பழுது பார்க்க புனரமைக்க ரூ.12 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்னை வெஸ்லி தேவாலயம், நெல்லை கால்டுவெல் தேவாலயம், சென்னை நவாப் வாலாஜா பள்ளிவாசல், ஏர்வாடி மற்றும் நாகூர் தர்கா ஆகியவை புனரமைக்கப்படும். 

11:55 AM (IST) Mar 18

Tamil Nadu Budget 2022 : ஆங்கிலத்திலும் பட்ஜெட் உரையாற்றிய நிதி அமைச்சர்

தேசிய, உலக அளவில் முதலீட்டாளர்கள் கவனத்தை ஈர்க்க பட்ஜெட்டின் சில முக்கிய குறிப்புகளை ஆங்கிலத்தில் உரையாற்றுகிறேன் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்.

11:52 AM (IST) Mar 18

Tamil Nadu Budget 2022 : புதிய மாநகராட்சிகளுக்கு தலா ரூ.10 கோடி நிதி

காஞ்சிபுரம், கும்பகோணம், கரூர், கடலூர், சிவகாசி மாநகராட்சிகளில் அடிப்படை கட்டமைப்புகளை உருவாக்க , தலா ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

11:50 AM (IST) Mar 18

Tamil Nadu Budget 2022 : வட்டியில்லா பயிர்க்கடன் திட்டத்திற்கு ரூ.200 கோடி

வட்டியில்லா பயிர்க்கடன் திட்டத்திற்கு ரூ.200 கோடி ஓதுக்கீடு செய்யப்படுவதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார்.

11:46 AM (IST) Mar 18

Tamil Nadu Budget 2022 : கொரோனாவால் உயிரிழந்த முன்கள பணியாளர்கள் குடும்பத்திற்கு ரூ.79 கோடி நிதி உதவி

கொரோனாவால் உயிரிழந்த முன்கள பணியாளர்கள் குடும்பத்திற்கு ரூ.79 கோடி நிதி உதவி என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார்.

11:42 AM (IST) Mar 18

Tamil Nadu Budget 2022 : பிரதமர் வீட்டு வசதி திட்டத்திற்கு ரூ.3700 கோடி நிதி ஒதுக்கீடு

பிரதமர் வீட்டு வசதி திட்டத்திற்கு ரூ.3700 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

11:41 AM (IST) Mar 18

Tamil Nadu Budget 2022 : கோயில்களை புனரமைக்க ரூ.100 கோடி

பழம்பெரும் கோயில்களை புனரமைக்க ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு செய்து பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

11:40 AM (IST) Mar 18

Tamil Nadu Budget 2022 : மகளிர் இலவச பயணத்திற்கு ரூ.1520 கோடி நிதி ஒதுக்கீடு

மாநகராட்சி பேருந்துகளில் மகளிர் இலவச பயணம் செய்ய மானியமாக ரூ.1520 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

11:37 AM (IST) Mar 18

Tamil Nadu Budget 2022 : சட்டமன்ற மேம்பாடு நிதியாக ரூ.705 கோடி ஒதுக்கீடு

சட்டமன்ற உறுப்பினர்கள் தொகுதி மேம்பாட்டு நிதியாக ரூ.705 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார்.

11:36 AM (IST) Mar 18

Tamil Nadu Budget 2022 : மின்சார பேருந்துகள் வாங்க ரூ.5,375 கோடி ஒதுக்கீடு

தமிழ்நாட்டில் மின்சார பேருந்துகள் வாங்கவும், பேருந்துகளை நவீன மயமாக்கவும் ரூ.5375 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

11:33 AM (IST) Mar 18

Tamil Nadu Budget 2022 : மின்பகிர்மான இழப்பீடுக்கு ரூ.13.108 கோடி ஒதுக்கீடு

தமிழ்நாவு மின்பகிர்மான இழப்பீடுகளை ஈடு செய்ய ரூ.13 ஆயிரத்து 108 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

11:29 AM (IST) Mar 18

Tamil Nadu Budget 2022 : 6 வழிச்சாலையாக மாறும் ஈசிஆர்

கிழக்கு கடற்கரை சாலையை ரூ.135 கோடியில் 6 வழிச்சாலையாக தரம் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார்.

11:23 AM (IST) Mar 18

Tamil Nadu Budget 2022 : சிங்காரச் சென்னை 2.0 திட்டத்திற்கு ரூ. 500 கோடி நிதி ஒதுக்கீடு

சிங்காரச் சென்னை 2.0 திட்டத்திற்கு ரூ. 500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார்.

11:20 AM (IST) Mar 18

Tamil Nadu Budget 2022 : பழங்குடியின மக்களுக்கு 443 வீடுகள் கட்ட ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு

விளிம்புநிலை பழங்குடியின மக்களுக்கு 443 வீடுகள் கட்ட ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

11:17 AM (IST) Mar 18

Tamil Nadu Budget 2022 : வங்கி கணக்கில் மாணவிகளுக்கும் மாதம் ரூ.1000

அரசு பள்ளிகளில் 6 - 12 வரை படித்து உயர் கல்வியில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் மாதம் ரூ.1000 வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என பட்ஜெட்டில் தெரிவித்துள்ளார்.