ஒண்ணுக்கும் உதவாத பட்ஜெட்... அதிமுகவை அதிர வைத்த விஜயகாந்த்
தமிழக பட்ஜெட் 2020-2021 - LIVE UPDATE

தமிழக அரசின் 2020-2021 ஆண்டுக்கான பட்ஜெட்டை துணை முதல்வரும் நிதி அமைச்சருமான பன்னீர் செல்வம் தற்போது தாக்கல் செய்து வருகிறார். அதன் முக்கிய அறிவிப்புகள்..
ஒண்ணுக்கும் உதவாத பட்ஜெட்... அதிமுகவை அதிர வைத்த விஜயகாந்த்
கிறிஸ்துவ தேவாலயங்கள் பழுதுபார்ப்பு மற்றும் மறுசீரமைப்புக்கான நிதி உயர்வு
கிறிஸ்துவ தேவாலயங்கள் பழுதுபார்ப்பு மற்றும் மறுசீரமைப்பு பணிகளுக்கு வழங்கப்படும் நிதியுதவி ரூ.1 கோடியில் இருந்து ரூ.5 கோடியாக உயர்வு
பட்ஜெட் யாருக்கும் பத்தாத பட்ஜெட்டாக உள்ளது...மு.க.ஸ்டாலின்
தமிழக சட்டப்பேரவையில் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த பட்ஜெட் யாருக்கும் பத்தாத பட்ஜெட்டாக உள்ளது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
அரசு ஊழியர்களுக்கு புதிய அடுக்குமாடிக் குடியிருப்பு
தமிழக அரசு ஊழியர்களுக்கு புதிய அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டித் தரப்படும் என்று பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மெட்ரோ ரயில் திட்டம்
சென்னையை இணைக்கும் வகையில் மாதவரம் - சோழிங்கநல்லூர் இடையே மெட்ரோ ரயில் திட்டம் துவக்கப்படும் என்று தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகளின் பயிர்க்கடன்
தமிழக பட்ஜெட்டில் விவசாயிகளின் பயிர்க்கடனுக்கு ரூ.11 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
மசூதிகளின் பராமரிப்பு
மசூதிகளின் பராமரிப்புக்காக ஆண்டுதோறும் வழங்கப்படும் நிதியுதவி ரூ.60 லட்சத்தில் இருந்து ரூ.5 கோடியாக உயர்த்தி வழங்கப்படும் என்றும் நிதியமைச்சர் பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
தேவாலயங்களின் பழுதுபார்ப்பு மற்றும் மறுசீரமைப்புப் பணி
கிறிஸ்துவ தேவாலயங்களின் பழுதுபார்ப்பு மற்றும் மறுசீரமைப்புப் பணிகளுக்காக வழங்கப்படும் நிதியுதவி ரூ.1 கோடியில் இருந்து ரூ. 5 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
ஆதிதிராவிடர் மாணவர்களின் கல்வி
ஆதிதிராவிட் முன்னேற்றத்திற்காக ரூ.4,109 கோடியும் ஆதிதிராவிடர் மாணவர்களின் கல்விக்கு ரூ.2,018 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நிறைவடைந்தது பட்ஜெட் தாக்கல்..!
தமிழக பட்ஜெட் நிதியமைச்சரால் தாக்கல் செய்யப்பட்டு தற்போது நிறைவடைந்துள்ளது.
ஏரி, குளங்கள் சீரமைப்பு..
தமிழகத்தில் இருக்கும் 906 குளங்கள், 183 அணைக்கட்டுகளை சீரமைத்தல் மற்றும் 37 செயற்கை செறிவூட்டல் கிணறுகள் அமைக்க ரூ.649 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பிரதமர் நகர்புற திட்டம்
பிரதமர் நகர்புற திட்டத்தின் கீழ் 1,12,876 தனி வீடுகளும் 65,290 அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்படுவதாக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேளாண் பதப்படுத்தப்படும் மண்டலங்கள்
8 மாவட்டங்களில் வேளாண் பதப்படுத்தப்படும் மண்டலங்கள் அமைக்கப்படுவதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
அம்ருத் திட்டம்
அம்ருத் திட்டத்திற்காக பட்ஜெட்டில் ரூ.1,450 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது
ஒருங்கிணைந்த வெள்ள நீர் வடிகால் திட்டம்
சென்னை மாநகராட்சியில் ஒருங்கிணைந்த வெள்ள நீர் வடிகால் திட்டம் தயாரிக்கப்பட இருப்பதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு
முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் 1033 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.
மாற்றுத்திறனாளிகள் மற்றும் இளைஞர் நலன்..!
மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக ரூ.667 கோடியும் இளைஞர் நலனுக்காக ரூ.218 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
விபத்து இழப்பீடு..!
விபத்து உள்ளிட்டவற்றில் அகால மரணம் அடைவோருக்கான இழப்பீடு ரூ.4 லட்சமாக உயர்த்தப்படும்.
ஏழைக்குடும்பங்களுக்கு காப்பீடு
ஏழைக் குடும்பங்களுக்கு எல்.ஐ.சி.யுடன் இணைந்து விபத்து, ஆயுள் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
ஸ்மார்ட் ரேசன் கார்டு..!
ஸ்மார்ட் ரேசன் கார்டு இருந்தால் எந்த கடையிலும் பொருட்களை வாங்கும் திட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.