டிசம்பர் இறுதியில் சட்டமன்றத் தேர்தலுக்கான நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படும் என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கிவருகிறது. ஒவ்வொரு அரசியல் கட்சியும் தேர்தல் பணியில் மும்மரமாக களத்தில் இறங்க தயாராகி வருகின்றன.  திமுக மற்றம் அதிமுக கட்சிகள் கூட்டணி தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளில் தனித்து போட்டியிடப் போவதாக நாம் தமிழர் கட்சி ஏற்கனவே அறிவித்துவிட்டது. அதன்படி தேர்தல் பணிகளையும் அக்கட்சி தொடங்கியுள்ளது. மேலும் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் தொகுதியையும் அக்கட்சி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாவது;- டிசம்பர் இறுதியில் தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படும். 117 தொகுதிகளில் ஆண் வேட்பாளர்களும், 117 தொகுதிகளில் பெண் வேட்பாளர்களும் போட்டியிடுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.