Asianet News TamilAsianet News Tamil

தமிழ்நாடும் கேரளா மாதிரி கதறனுமா..? அடுத்த 10 நாளைக்கு அடங்கி இருங்க.. எச்சரிக்கும் சுகாதாரத்துறை செயலாளர்.

அண்டை மாநிலங்களான ஆந்திரா கேரளா மற்றும் பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ள காரணத்தினால் நம் மாநிலத்தின் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு பண்டிகை நாட்களில் கண்காணிப்பு குழு தீவிரமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளதாக கூறினார்.

Tamil Nadu and Kerala model kataranuma ..? Stay tuned for the next 10 days .. Warning Health Secretary.
Author
Chennai, First Published Aug 26, 2021, 3:42 PM IST

கேரள மாநிலத்தில் பண்டிகையால் தொற்று அதிகரித்தது போன்று, நம் மாநிலத்தில் அதிகரிக்காத வண்ணம் அடுத்த 10 நாட்களுக்கு மிகவும் கூர்ந்து கண்காணித்து செயல்பட வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியருக்கும் அறிவுறுத்தி உள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். மேலும் அடுத்த மாதத்திற்கு மத்திய அரசு தொகுப்பில் இருந்து 1 கோடியே 4 லட்சம் தடுப்பூசி தமிழகத்திற்கு வழங்கப்பட உள்ளதாகவும் கூறினார்.

சென்னை டி.எம்.எஸ் வளாகத்தில் உள்ள மருந்து சேமிப்பு கிடங்கை சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், அண்டை மாநிலங்களான ஆந்திரா கேரளா மற்றும் பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ள காரணத்தினால் நம் மாநிலத்தின் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு பண்டிகை நாட்களில் கண்காணிப்பு குழு தீவிரமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளதாக கூறினார்.

இந்த மாத தொகுப்பிற்கு தற்போது வரை 63.76 லட்சம் வந்துள்ளது.  கூடுதலாக மத்திய அரசு 5.89 லட்சம் அளித்துள்ளனர். மீதமுள்ள 16.75 லட்சம் தடுப்பூசியும் விரைவில் வழங்குவதாக மத்திய அரசு தெரிவித்து உள்ளது. அதேபோல் வரும் மாதத்திற்கு மத்திய அரசு 1.04 கோடி தடுப்பூசி வழங்க உள்ளதாக தெரிவித்தார்.

தற்போது 14 லட்சம் தடுப்பூசி கையிருப்பு உள்ளது. இந்த தடுப்பூசிகள் 3 நாட்களுக்கு பயன்படுத்தப்படும். மேலும் மத்திய அரசு வழங்க வேண்டிய தடுப்பூசிகளும் ஓரிரு நாட்களுக்குள் வழங்குவதாக கூறியுள்ளனர். அடுத்த 10 நாட்களுக்கு மிகவும் கூர்ந்து கண்காணித்து செயல்பட வேண்டும்.கேரள மாநிலத்தில் பண்டிகையால் தொற்று அதிகரித்தது போன்று, தமிழகத்தில் அதிகரிக்காத வண்ணம் நடவடிக்கை எடுக்க அனைத்து மாவட்ட ஆட்சியருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

எல்லைப்பகுதிகளில் உள்ள கிராமங்களில் நாள்தோறும் பக்கத்து மாநிலங்களுக்கு சென்று வருபவர்களுக்கு 100 % தடுப்பூசி செலுத்துவதை உறுதி செய்ய மாவட்ட ஆட்சியர்களிடம் அறிவுறுத்தி உள்ளதாகவும், 3ம் அலை வந்தாலும் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க சுகாதாரத்துறை தயாராக உள்ளது என்றார்.தளர்வுகள் உள்ளது என்பதால் பொதுமக்கள் அஜாக்கிறதையாக இருக்க கூடாது. கட்டயாம் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும், அதேபோல் முக கவசம் அணிதல், சமூக இடைவெளி ஆகியவற்றையும் பின்பற்ற வேண்டும் என்று கூறினார்.

Follow Us:
Download App:
  • android
  • ios