Asianet News TamilAsianet News Tamil

அய்யய்யோ... நம் தமிழ் அழிகிறதே..!! தமிழா... தமிழா... இது அவமானம்..!!

மொழியின் தாக்கத்தை வேரிலே வெந்நீர் ஊற்றி அழிக்கும் நடவடிக்கையாகும். இரண்டாம் தாள் என்பது மொழியினை பிழையின்றி எழுதவும் படிப்பது மட்டுமல்ல மொழி இலக்கணத்தையும் ஆளுமைத்தன்மையையும் வெளிப்படுத்தும்.

tamil language exam paper reduced as single paper
Author
Chennai, First Published Sep 14, 2019, 11:33 AM IST

10 ஆம் வகுப்புப் பொதுத்தேர்வில் இரண்டு தாள்களாக இருந்த  தமிழ்மொழிப் பாடத்தினை  ஒரே தாளாக குறைப்பதின் மூலம் மாணவர்களிடையே மொழி ஆர்வத்தை குறைப்பதுடன், இது எதிர்காலத்தில் தமிழ் மொழியையே அழிக்கும் முயற்சியாகும்
என தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் தமிழக அரசை கண்டித்துள்ளது.

tamil language exam paper reduced as single paper

10ம் வகுப்பிற்கு இனி தமிழ் மற்றும் ஆங்கிலத்திற்கு 2 தாள் கிடையாது, ஒரே தாள் தான் என்று 10. 05. 2019 அன்று பள்ளிக்கல்வித்துறை பரிந்துரைத்த போதே தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்தபோது பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவ்வாறு மாற்றும் எண்ணம் அரசுக்கு இல்லை என்று தெரிவித்து முற்றுப்புள்ளி வைத்தார். ஆனால் இன்று அரசாணை 161ஐ வெளியிட்டிருப்பது மொழியின் தாக்கத்தை வேரிலே வெந்நீர் ஊற்றி அழிக்கும் நடவடிக்கையாகும். இரண்டாம் தாள் என்பது மொழியினை பிழையின்றி எழுதவும் படிப்பது மட்டுமல்ல மொழி இலக்கணத்தையும் ஆளுமைத்தன்மையையும் வெளிப்படுத்தும்.tamil language exam paper reduced as single paper

ஆனால் தேர்வுதாள் குறைப்பதின் மூலம்  எதிர்காலச் தமிழ்மொழி சமுதாயத்தை சவக்குழிக்கு அனுப்பும் முயற்சியாகும். மாணவர்களின் மன அழுத்தம் குறையும் ஆசிரியர்களின் வேலைப்பளுவும் நேரம் விரையும் ஆவதும் குறையும் என்று அரசு தரும் விளக்கங்கள் ஏற்புடையதல்ல, மொழியின் வளர்ச்சியும், மாணவர்களின் எதிர்காலத்தையும் காப்பாற்றிட. மற்றப்பாடங்களுக்கு அகமதிப்பெண் வழங்குவதுபோல தமிழ்மொழிப் பாடத்திற்கும் அகமதிப்பெண் 20 வழங்கிட வேண்டும். மேலும் மாணவர்களின் மனநிலையினை கருத்தில்கொண்டு தன்னம்பிக்கையை வளர்க்கும் விதமாகவும் தேர்வுகளில் வெற்றித்தோல்வி என்பதை அறவே ஒழித்து மதிப்பெண் முறையினை அகற்றி மதிப்பீடு முறையினை அமுல்படுத்துவதன் மூலம் தற்கொலை எண்ணங்களும் தவிர்க்க முடியும். எனவே தமிழ்மொழியினை காப்பாற்றிட அரசாணை 161ஐ திரும்பப் பெற வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios