tamil fishermen arressted again

அடுத்தடுத்து தமிழக மீனவர்களை கைது செய்யும் இலங்கை கடற்படை !! நாகை பகுதியைச் சேர்ந்த 10 பேரை அள்ளிச்சென்றது !!!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

வங்கக் கடலில் பருத்திதுறை அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை மாவ்ட்ட மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படையினர் பிடித்துச் சென்றனர்.

நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டையை சேர்ந்த மீனவர்கள் 200-க்கும் மேற்பட்ட படகுகளில் நேற்றுமுன் தினம் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். அவர்கள் இன்று காலை பருத்தித்துறை கடல் பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்கள் 10 பேரை கைது செய்தனர். 

மேலும் ஒரு படகையும் பறிமுதல் செய்தனர். எல்லை தாண்டி அத்துமீறி மீன்பிடித்ததால் மீனவர்களை கைது செய்தததாக இலங்கை கடற்படை தரப்பில் கூறப்படுகிறது. கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 10 பேரும், காங்கேசன் துறைமுக கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

ஏற்கனவே இரண்டு நாட்களுக்கு முன்பு நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களை இந்திய கடலோர காவல் படையினர் துப்பாக்கியால் சுட்டதில் படுகாயமடைந்தனர்.

அந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் இன்று தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்திருப்பது மீனவர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே இலங்கை சிறைகளில் 99 தமிழக மீனவர்கள் அடைத்து வைக்கப்படுள்ள நிலை அவர்கள் அனைவரையும் நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும் என முதலமைச்சர் நேற்று தான் பிரதமர் நரேந்தி மோடிக்கு கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தது.