லடாக்கில் அமைதி திரும்பிய நிலையில் சீனா தாக்குதலை  தொடங்கி வைத்திருக்கின்றது , இந்தியா திருப்பி தாக்கியதால்  சீன தரப்பிலும் சிலர் இறந்திருக்கின்றனர். இந்திய தரப்பில் 3 பேர் வீர மரணத்தை எதிர்பாரா தாக்குதலில் தழுவியிருக்கின்றனர், உச்சபட்ச பதற்றத்தில் வடக்கு எல்லை வந்தாயிற்று.

பேசிகொண்டே முதுகில் குத்தும் அதே வஞ்சகத்தை மறுபடியும் செய்திருக்கின்றது சீனா, அவர்கள் வரலாற்றிலும் 1967 க்கு பின் எல்லை தாண்டி வந்து  கொல்வது இதுதான் முதல் முறை.

இந்நிலையில் மக்கள் மய்யத்தின் த்லைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘’எல்லையில் சீன வீரர்களுடனான மோதலில் உயிரிழந்த இராமநாதபுரத்தைச் சேர்ந்த இந்திய வீரர் பழனி அவர்களின் வீரத்திற்கும், தியாகத்திற்கும் தலைவணங்குகிறோம். அவர் குடும்பத்திற்கு நம் அன்பும், ஆழ்ந்த அனுதாபங்களும். உயிர்களின் மதிப்பறிந்தவர் போரை விரும்ப மாட்டார்கள். அமைதி வழி தீர்வு காண்போம்’எனத் தெரிவித்துள்ளார்.