முகக் கவசம் பற்றிப் பேச வேண்டிய நேரத்தில், வேறு கவசம் பற்றியே பேசுவது ஏன்? பக்தியும் இல்லை, ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை. தேர்தல் நெருங்குவதால், திமுக வின் மீது அவதூறு பரப்புவது மட்டுமே நோக்கம் என சுப.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர், ’’இந்துக் கடவுள்களைக் காப்பாற்ற வரிந்து கட்டிக் கொண்டு நிற்பவர்கள், இந்து மக்களுக்கு நன்மை செய்ய எப்போதும் முன் வந்ததில்லை. தங்கள் தலைவர்களின் படங்களுக்குத் தங்கள் கட்சியின் வண்ணம் பூசிப் பார்த்திருக்கிறோம். சரியான தலைவர்களே இல்லாத கட்சியினர் என்ன செய்வார்கள் பாவம், அடுத்த கட்சித் தலைவர் சிலையில் தங்கள் கட்சித் சாயத்தைப் பூசுவார்கள் போலிருக்கிறது.

இந்து என்ற பெயரில் இனியும் பார்ப்பனிய ஆதிக்கத்தை அனுமதிக்க முடியாது. பார்ப்பனர்- பார்ப்பனரல்லாதார் என்பதே இன்றைய அரசியலின் எதிர்த் துருவங்கள். முகக் கவசம் பற்றிப் பேச வேண்டிய நேரத்தில், வேறு கவசம் பற்றியே பேசுவது ஏன்? பக்தியும் இல்லை, ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை. தேர்தல் நெருங்குவதால், திமுக வின் மீது அவதூறு பரப்புவது மட்டுமே நோக்கம்’’என அவர் தெரிவித்துள்ளார்.